இந்தியன் 2 படம் எப்படி இருக்கு: சேனாபதி தாத்தா கவர்ந்தாரா?

0
72
Article Top Ad

எதிர்பார்ப்போடு இன்று இந்தியன் 2 படம் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகின்றது.

இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் என்ற பெயரை பெற்றவர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் இந்தியன்.

கமல் ஹாசன், மனீஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நடித்திருந்த நிலையில் மிக பெரிய வெற்றி பெற்றது.

இந்நிலையில், இன்று இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.

படம் பார்த்தவர்கள் தங்களது விமர்சனத்தை சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஷங்கர் திரும்பி வந்துவிட்டார். இயக்கம் அருமை. எடிட்டிங்கில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

அண்மை காலத்தில் ஷங்கரின் சிறந்த படைப்பு இது தான். முதல் 20 நிமிடம் கமலை பார்க்க முடியாவிட்டாலும் பில்ட்அப் பலமாக இருக்கிறது.

உலகநாயகனின் நடிப்பு வேற லெவல். அடுத்து சித்தார்த்தின் நடிப்பை பாராட்டியே ஆக வேண்டும். அனிருத்தின் இசையும் படத்திற்கு பொருந்துகின்றது.

அந்த காலண்டர் பாடல் தேவையில்லாதது என்ற ஒரு விமர்சனமும் உள்ளது.

படத்தின் இறுதியில் வரும் இந்தியன் 3 ட்ரெய்லர் மிரட்டலாக இருக்கிறது.

இந்தியன் 3 மீது தான் கண்கள் இருக்கிறது என கமல் ஹாசன் சொன்னது அப்போ புரியல இப்போ தான் புரியுது.

#indian2
Buildupலயே 20நிமிடம் நகர்கிறது.கமல் படம் முழுதும் ஆக்கிரமிச்சு இருக்கார்.சித்தார்த் classஆன acting.second half விறுவிறுப்பாக நகர்கிறது.அனிருத் bgm ok.end card பிறகு வருகிற trailer நெறி🔥.waiting for indian3 pic.twitter.com/RXqbYkeRMN

— கடல்நண்டு🦀 (@beach_oyster) July 12, 2024
இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது.

அண்மையில் வெளியான படங்களில் இரண்டாம் பாதி தான் மைனஸாக இருந்தது.

ஆனால் இந்தியன் 2 படத்திற்கு இரண்டாம் பாதி கை கொடுத்திருக்கிறது.

இந்தியன் தாத்தா சண்டை போடுவதை பார்க்கவே புல்லரிக்கிறது. இந்தியன் தாத்தா வயது யாருக்கு தேவை.

அவர் ஃபுல் ஃபார்மில் இருக்கிறார். ஆண்டவரை இப்படி பார்த்து எத்தனை காலமாகிறது என்று ரசிகர்கள் நெகிழ்ச்சியில் உள்ளனர்.

Wtf this scene 🔥🔥🔥one man army show 2nd half stunning 🤩
Indian 2 #Indian2 #Indian2July12 #KamalHaasan𓃵 #Shankar #aniruth pic.twitter.com/8cFypH1LoV

— Pravendra Sathasivam (@PravendraSatha1) July 12, 2024
Godddddd @ARRahman 🔥🔥🔥!!!

The Loss is for #Indian2 & @shankarshanmugh pic.twitter.com/1UvMhsiHDk

— Aravinth (@weekday_19) July 12, 2024
#Indian2FromToday FDFS 🤭🤭😂😂

Youtubers oru 10 Memebers 😜
Theatre staff oru 10 Memebers 😝
Vedeka paka vanthave 10 Memebers
Kamal fans 4 Memebers 🤪 pic.twitter.com/6SYIX05jEO

— Ḉʜāѝḍӷṹ (@chandru_war) July 12, 2024