ரணில் போட்டியிடுவரா?: ஐ.தே.க பதில்

0
46
Article Top Ad

ஜனாதிபதித் தேர்தலை விரைவில் நடத்துமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுடன் இன்று புதன்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி அல்லது பொதுஜன பெரமுனவில் போட்டியிடுவாரா என கேள்வி எழுப்பப்பட்டதையடுத்து , ஜனாதிபதி சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவார் என அவர் பதிலளித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்ததன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளரை விரைவில் அறிவிக்கும் என பாலித ரங்கே பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகங்களுக்கு மத்தியில் கட்சிகளின் வேட்பாளர்கள் குறித்தும் இதுவரை உத்தியோகப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.

இவ்வாறு சட்ட மற்றும் நிதித் தடைகள் காரணமாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் திறன் குறித்து பல்வேறு தரப்பினர் கவலை தெரிவித்து வரும் நிலையில், அவ்வாறான தடைகள் எதுவும் இல்லையென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தலை திகதியை அறிவிப்பதற்கான அதிகாரம் இன்று நள்ளிரவு முதல் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்க உள்ளது.

இந்நிலையில் செப்டம்பர் மாதம் 17 மற்றும் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட ஒரு நாளொன்றில் வாக்கெடுப்பை நடத்துவதற்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் ஆணைக்குழு கூறியுள்ளது.