நேபாளத்தில் விமான விபத்து: பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்

0
35
Article Top Ad

நேபாளத்தின் காத்மாண்டுவில் புதன்கிழமை இடம்பெற்ற விமான விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

விமானத்தின் தலைமை விமானி உயிர் பிழைத்துள்ளதாகவும் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேபாளத்தில் விமான விபத்து

நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையத்தில் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளதுடன் ஐவர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் (TIA) சௌர்யா ஏர்லைன்ஸ் விமானம் CRJ-200 விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

குறித்த விமானம் 19 பேருடன் பயணித்ததாகவும், புறப்பட்டு சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.