வரவு செலவுத்திட்டத்தில் தமிழகம் புறக்கணிப்பு: இந்தியா கூட்டணி கண்டன போராட்டம்

0
40
Article Top Ad

இந்தியாவில் நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவுத்திட்டம் பாராபட்சமாக அமைந்துள்ளதென தெரிவித்துஇந்தியா கூட்டணி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மத்திய வரவு செலவு திட்டத்தை இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.

ஆந்திராவிற்கு ரூ.15,000 கோடியையும் பீகார் மாநிலத்திற்கு ரூ.26,000 கோடியையும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.

ஆந்திரா, பீகார் மாநிலங்களை தவிர தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பெயர் கூட இந்த வரவு செலவு திட்டத்தில் இல்லையென எதிர்கட்சிகள் விமர்சித்தன.

இதன்பின்னர் மத்திய வரவுசெலவுத்திட்டம் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில், மத்திய வரவு செலவுத்திட்டம் பாரபட்சமாக அமைந்துள்ளதென தெரிவித்து இன்று போராட்டம் முன்னெடுக்கப்படும் என இந்தியா கூட்டணி அறிவித்தது

இந்நிலையில், மத்திய அரசின் வரவு செலவுத்திட்டத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு எந்த திட்டமும் அறிவிக்காமையை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி அமைச்சர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாரபட்சமான வரவு செலவுத்திட்டம் என்று எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.