பங்களாதேஷில் போராட்டம் தணிந்தது: தொலைத்தொடர்பு சேவைகள் பகுதியளவில் ஆரம்பம்

0
30
Article Top Ad

பங்களாதேஷில் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்த தொலைத்தொடர்பு வசதிகள் ஐந்து நாட்களின் பின்னர் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளுக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரச சேவைகளுக்கான இடஒதுக்கீட்டு முறைமைக்கு எதிரான போராட்டங்களில் சுமார் 150 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தொலைத்தொடர்பு வசதிகள் முடக்கப்பட்டன.

1971 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு 30 வீத இடஒதுக்கீடு உள்ளிட்ட ஒதுக்கீடுகளுக்கு எதிராக கடந்த சில நாட்களாக ஆர்ப்பட்டங்கள் இடம்பெற்ற நிலையில், கடந்த வாரம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு சிறிது சிறிதாக தளர்த்தப்பட்ட நிலையில், இன்று (24) முதல் 7 மணி நேரம் தளர்த்தப்படுவதுடன், அலுவலகங்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை திறந்திருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், பங்களாதேஷின் டாக்கா நகரின் சில இடங்களில் பொதுப்போக்குவரத்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, எட்டு அம்சக் கோரிக்கைப் பட்டியலின் ஏனைய நான்கு நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு 48 மணிநேர கால அவகாசத்தை போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளனர்.

மேலும், குறித்த கால அவகாசம் நாளை வியாழக்கிழமையுடன் நிறைவடையும் நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை அறிவிப்பதாக மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.