GOAT படத்தை பார்த்துவிட்டு விஜய் கூறிய விமர்சனம்

0
66
Article Top Ad

தளபதி விஜய் நடிப்பில் தற்போது பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் GOAT. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இதுவரை இப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளிவந்த கிலிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்த நிலையில், அடுத்ததாக அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் மூன்றாவது பாடல் விரைவில் வெளிவரவுள்ளது.

செப்டம்பர் 5ஆம் தேதி GOAT படம் வெளிவரவிருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியிட்டு விழா ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் பெரிதளவில் இருக்க, படத்தை பற்றிய விமர்சனம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. GOAT படத்தின் முதல் பாதியை சமீபத்தில் படத்தின் கதாநாயகன் தளபதி விஜய் பார்த்துவிட்டாராம். படத்தை பார்த்தபின் அவர் சொன்ன வார்த்தை ‘படம் தெறிக்குது’ என கூறியுள்ளாராம். இதன்மூலம் படம் வேற லெவலில் வந்துள்ளது என பேசி வருகிறார்கள்.