பிலிப்பைன்ஸில் அமெரிக்க ஏவுகணை நிலைநிறுத்தம்: அதிகரித்துள்ள பதட்டம்

0
35
Article Top Ad

அமெரிக்காவின் இடைநிலை ஏவுகணை நிலைநிறுத்தம் குறித்து பிலிப்பைன்ஸை எச்சரித்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, அத்தகைய நடவடிக்கை பிராந்திய பதட்டங்களைத் தூண்டும் மற்றும் ஆயுதப் போட்டியைத் தூண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூட்டு இராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாக அமெரிக்கா தனது டைஃபோன் ஏவுகணை அமைப்பை பிலிப்பைன்ஸில் நிலைநிறுத்தியது.

பிலிப்பைன்ஸ் இராணுவ அதிகாரி ஒருவர், பயிற்சியின் போது அது ஏவப்படவில்லை என்றும் குறித்த ஏவுகணை எவ்வளவு காலம் நாட்டில் வைக்கப்பட்டிருக்கும் என்பது பற்றிய விவரங்கள் தமக்கு தெரியாது என்றும் ராய்ட்டர்ஸிடம் கூறினார்.

சீனா-பிலிப்பைன்ஸ் உறவு எப்போதும் ஒரு பதட்டமான சூழல்நிலையிலேயே உள்ளது.

லாவோஸின் தலைநகரான வியன்டியானில் இரண்டு உச்சிமாநாடுகளுக்கு முன்னதாக உலக வல்லரசுகளின் உயர்மட்ட தலைவர்கள் கூடியுள்ளனர்.

இதன்போது சீன வெளியுறவு அமைச்சர் வாங் பிலிப்பைன்ஸ் வெளியுறவு செயலாளர் என்ரிக் மனலோவிடம் இதுகுறித்த கலந்துரையாடியுள்ளார்.

சீன வெளியுறவு அமைச்சின் அறிக்கையின்படி, பிலிப்பைன்ஸ் இரு தரப்பு ஒருமித்த கருத்தையும் அதன் சொந்த கடமைகளையும் மீண்டும் மீண்டும் மீறுவதால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் சவால்களை எதிர்கொள்கின்றன எனக் கூறப்பட்டுள்ளது.

“பிலிப்பைன்ஸ் அமெரிக்க இடைநிலை ஏவுகணை அமைப்பை அறிமுகப்படுத்தினால், அது பிராந்தியத்தில் பதற்றத்தையும் மோதலையும் உருவாக்கும் மற்றும் ஆயுதப் போட்டியைத் தூண்டும், இது பிலிப்பைன்ஸ் மக்களின் நலன்களுக்கும் விருப்பங்களுக்கும் முற்றிலும் பொருந்தாது” என்று வாங் எச்சரித்துளளார்.

பிலிப்பைன்ஸின் இராணுவமும் அதன் வெளியுறவு அமைச்சகமும் வாங்கின் கருத்துக்கள் தொடர்பில் எதுவித உடனடி பதிலளிக்கலையும் அளிக்கவில்லை.

சீனாவும் பிலிப்பைன்ஸும் தென் சீனக் கடல் உரிமை விவகாரத்தில் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

மேலும் மணிலாவின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்தில் உள்ள சர்ச்சைக்குரிய நிலப்பரப்புகள் தொடர்பில் பெய்ஜிங் அதன் உரிமைகோரல்களை முன்வைப்பதால் இருநாடுகளும் தொடர்ந்து கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றன.