எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த நிலையில், பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல்ல என அறிவித்துள்ளது.
இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு எங்களின் அதரவை வழங்கப்போவதில்லை எனவும் தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான முன்னாள் ரஷ்ய தூதுவரும், ராஜபக்ஷ குடும்ப உறுப்பினருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
“நாட்டிற்கு இன்று மகிழ்ச்சியான செய்தி. பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க இல்லை என தற்போது தீர்மானிக்கப்பட்டது.
ராஜபக்ஸ குடும்பம் மாத்திரம் இல்லை, கட்சியின் அரசியல் குழுவும் இந்த தீர்மானத்தை இன்று எடுத்தது. எந்த விதத்திலும் ரணில் விக்ரமசிங்க எங்கள் வேட்பாளர் கிடையாது என தீர்மானிக்கப்பட்டது. ரணில் எமக்கானவர் அல்ல. மிக மகிழ்ச்சியான செய்தி. எமது வேட்பாளரின் பெயர் இன்று முன்மொழியப்பட்டது. தீர்மானம் எதிர்வரும் புதன்கிழமை அறிவிக்கப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.