92 எம்.பிகள் ரணிலுக்கு ஆதரவு: இன்று மாலை எடுக்கப்பட்ட முடிவு

0
41
Article Top Ad

அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் உட்பட 92 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று செவ்வாய்க்கிழமை மாலை சந்தித்துள்ளனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் அவருக்கு ஆதரவளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.