டெஸ்லா தலைவரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை எதிர்த்துப் போராடுவதற்கான சவாலை ஏற்றுக்கொண்டார்.
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, எலோன் மஸ்க்கை தேசிய தொலைக்காட்சியில் விவாதிக்க சவால் விடுகிறார் என நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதற்கு எலான் மஸ்க் “நான் ஏற்றுக்கொள்கிறேன்” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“தான் வெற்றி பெற்றால், அவர் வெனிசுலாவின் சர்வாதிகார பதவியை விலக வேண்டும் எனவும் அவர் வெற்றி பெற்றால், நான் அவருக்கு செவ்வாய் கிரகத்திற்கு இலவச சவாரி தருகிறேன் என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
If I win, he resigns as dictator of Venezuela.
If he wins, I give him a free ride to Mars.
— Elon Musk (@elonmusk) July 31, 2024
கராகஸில் அரசியல் அமைதியின்மைக்கு மத்தியில் எலான் மஸ்க் மற்றும் நிக்கோலஸ் மதுரோ இடையே வார்த்தைப் போர் அதிகரித்துள்ளது.
நிக்கோலஸ் மதுரோ ஒரு சோசலிசத் தலைவர் ஆவார். தனது நாட்டிற்கு எதிராக டெஸ்லா தலைவர்இணையக்குற்றங்களில் ஈடுபட்டதாக மதுரோ குற்றம் சாட்டினார்.
வெனிசுலாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, தேர்தலை ஒரு “கேலி” என்றும் நிக்கோலஸ் மதுரோவை “சர்வாதிகாரி” என்றும் குறிப்பிட்டார்.
எலோன் மஸ்க்கின் இவ்வாறானா கருத்துக்களைத் தொடர்ந்து, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மதுரோ கருத்து வெளியிட்டுள்ளார்.
“சமூக ஊடகங்கள் மெய்நிகர் யதார்த்தத்தை உருவாக்குகின்றன, மேலும் மெய்நிகர் யதார்த்தத்தை யார் கட்டுப்படுத்துகிறார்கள்?
எங்களின் புதிய பரம எதிரி,எலோன் மஸ்க். நீங்கள் சண்டையிட விரும்புகிறீர்களா? நான் தயாராக இருக்கிறேன் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சண்டையிடலாம்,” என்று அவர் கூறினார்
JUST IN: Elon Musk accepts Venezuelan Dictator Nicolás Maduro’s challenge to a fight.
Just when you thought 2024 couldn’t get any crazier.
Maduro: “Elon Musk. Whoever messes with me, dries up. Whoever messes with Venezuela dries up, Elon Musk.
You want to fight? Let’s have… pic.twitter.com/rqvCphOsuJ
— Collin Rugg (@CollinRugg) July 31, 2024