சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்: வெவ்வேறு வழிகளில் பயணிக்கும் தமிழ் கட்சிகள்

0
33
Article Top Ad

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படும் முன்னிருந்தே, சில தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் “பொது வேட்பாளர்” ஒருவரை நிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதங்களை நடத்தி வருகின்றன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல சுற்று கலந்துரையாடல்களுக்குப் பிறகு, ஏழு அரசியல் கட்சிகள் மற்றும் ஏழு சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து “தமிழ் மக்கள் பொதுச் சபையை” அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜூலை 22ஆம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் கையெழுத்திட்டன.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள் கூட்டணியைச் சேர்ந்த சி.வி.விக்னேஸ்வரன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) த.சித்தார்த்தன், தமிழ்த் தேசியக் கட்சியின் என்.ஸ்ரீகாந்தா, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈ.பி.ஆர்.எல்.எப்.), தேசியவாத பசுமை இயக்கத்தின் பி.ஐங்கரநேசன் மற்றும் ஜனநாயக கேடர்ஸ் கட்சியின் எஸ்.வேந்தன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

சிவில் சமூக ஆர்வலர்களான த.வசந்தராஜா, எஸ்.சி.ஜோதிலிங்கம், பேராசிரியர் கே.டி.கணேசலிங்கம், மற்றும் ஆர்.விக்னேஸ்வரன், அரசியல் ஆய்வாளர்களான ஏ.ஜதீந்திரன் மற்றும் எம்.நிலாந்தன் ஆகியோரும் கையெழுத்திட்டனர்.

எவ்வாறாயினும், வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலப்பகுதியில் பொது வேட்பாளரை பெயரிடுவதில் புதிதாக அமைக்கப்பட்ட சபை சில சவால்களை எதிர்கொண்டுள்ளது.

“அடுத்த வாரத்திற்குள் பொது மக்களுக்கு வேட்பாளரை அறிவிப்போம் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று சபையின் செயல்பாட்டில் நெருக்கமாக ஈடுபட்டுள்ள அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

சவால்களை ஏற்றுக்கொண்ட நிலாந்தன், சகல உறுப்பினர்களின் கருத்துக்களையும் கருத்திற்கொண்டு ஜனநாயகக் கோட்பாடுகளின் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்க சபை தீர்மானித்திருந்ததாலும், முக்கியமான விடயங்களில் உள்ளகத் தேர்தலுக்குச் செல்வது குறித்தும் பரிசீலிப்பதாலேயே தாமதம் ஏற்பட்டதாக வலியுறுத்தினார்.

“இது மிகவும் சவாலானது, ஏனெனில் தமிழ் அரசியல் போர்க்காலத்திலும் கூட ஒரு நபர் முடிவுகளை நிறைவேற்றும் செயல்முறைக்கு பயன்படுத்தப்பட்டது,” என்று நிலாந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (TNPF) ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளது.

ஏனெனில் மாறிவரும் அரசாங்கங்களும் எதிர்கால அரசாங்கமும் கூட இனப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அரசியல் விருப்பம் இல்லை என்று அந்தக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இன்னும் இறுதித் தீர்மானத்தை எடுக்கவில்லை என அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் 11ஆம் திகதி மத்திய குழு கூடி இது குறித்து விவாதிக்கும் என அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுவொருபுறமிருக்க பிரதான் வேட்பாளர்களான சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் தமிழரசு கட்சியின் உறுப்பினர்களை யாழ்ப்பாணத்தில் சந்தித்துப் பேசியுள்ளனர்.

எனினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழரசு கட்சியினரை சந்தித்து பேசவில்லை.

தற்போது யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி தமிழரசு கட்சி உறுப்பினர்களை சந்தித்து பேசலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.