தபால் மூல வாக்களிப்பு: விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நள்ளிரவுடன் நிறைவு

0
18
Article Top Ad

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்று வெள்ளிக்கிழமை (09) நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

அரச ஊழியர்கள் தங்களின் தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை நிறுவன தலைவர்கள் ஊடாக மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த 5ஆம் திகதியுடன் முடிவடையவிருந்த நிலையில் இன்று நள்ளிரவு வரை அது நீடிக்கப்பட்டது.

தபால் மூல விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்ய தேர்தல் ஆணைய இணையதளத்தில் தகவல்களைப் பெறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.