ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்லும்

0
30
Article Top Ad

பந்து வீச்சாளர்களின் தரம் மற்றும் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரை உள்ளடக்கிய வலுவான துடுப்பாட்ட வரிசை ஆகியவற்றால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை தொடர்ச்சியாக 3-வது முறையாக இந்திய அணி வெல்லும் என முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

இன்னிலையில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரீத் பும்ரா,முகமது ஷமி ஆகியோர் உடற்தகுதியுடன் உள்ளனர் என்றும் இவர்களுடன் முகமது சிராஜும் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா போன்றோரும் உடற்தகுதியுடன் உள்ளனர்

இதற்கிடையே இந்த தொடரை ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என அந்த அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது