ஜனாதிபதி டே்பாளராக களமிறங்கவுள்ள விஜயதாச ராஜபக்சவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவு கிடைப்பது நிச்சயமற்றதாகக் காணப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மைத்திரியின் ஆதரவு கிடைத்தால் ஏற்றுக் கொள்வதாகவும், ஆதரவு கிடைக்கவில்லையெனில் அதையும் ஏற்றுக் கொள்வதாகவும், விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் விஜயதாச ராஜபக்சவிடம் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் அதனைத் தெரிவித்தார்.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மற்றுமொரு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் நிலையில் அது சஜித் பிரேமதாசவாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது.
தானும் இது தொடர்பில் கேள்விப்பட்டதாக விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.