வடக்கு, கிழக்கினை இணைப்பதற்கு ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது – நாமல்

0
25
Article Top Ad

”வடக்கு கிழக்கினை இணைப்பதற்கு ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.

பேலியகொட வித்யாலங்கார பிரிவேனாவிற்கு நேற்று விஜயம் மேற்கொண்டு ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளதாவது” ஏனைய அரசியல் கட்சிகளைப் போன்று, தேர்தல் நேரத்தில் ஆதாயம் பெறுவதற்காக நாங்கள் எங்கள் கொள்கைகளை மாற்றுவதில்லை.

மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்க முடியாது. வடக்கு கிழக்கையும் இணைக்க முடியாது. அவ்வாறு செய்தால் நாடு பிளவடையும் எனவே இந்த நாட்டை பிரிக்க நான் அனுமதிக்கமாட்டேன். வெளிப்படையாக அதனையே கூறுகிறேன்.

2015ம் ஆண்டு நாட்டின் வளர்ச்சி நிறுத்தப்பட்டது. ஆட்சியில் இருந்தது நல்லாட்சி அரசாங்கம்.
எனவே எங்கு நாட்டில் வளர்ச்சி தடைப்பட்டதோ அங்கிருந்து எனது பயணத்தை ஆரம்பிப்பேன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது எமது பொறுப்பு” இவ்வாறு நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.