ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டதால் வாக்காளர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி, நிதியமைச்சர் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களால், வாக்காளர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒத்திவைப்பு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மற்றும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை உள்ளிட்ட பல கட்சிகள் தாக்கல் செய்த மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு முதலில் உள்ளூராட்சி தேர்தலை கடந்த வருடம் மார்ச் மாதம் 9 ஆம் திகதி திட்டமிட்ட நிலையில் பின்னர் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீண்டு வருவதால் அரசாங்கம் நிதிப் பற்றாக்குறையை மேற்கோள் காட்டி தேர்தலை நடத்தாத நிலையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.