டிஜிட்டல் உலகில் ஆதிக்கம் செலுத்தும் ரொனால்டோ: யூடியூப் பக்கம் ஆரம்பித்து நம்ப முடியாத உலக சாதனைகளை படைப்பு

0
26
Article Top Ad

கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி, பிரபல கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒவ்வொரு இன்ஸ்டாகிராம் இடுகைக்கும் 3.23 மில்லியன் டொலர் சம்பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமில் 636 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களை கொண்டுள்ள அவருக்கு இது சாத்தியம் என்றே பலரும் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது அதிகாரப்பூர்வமாக யூடியூப் பக்கத்தை ஆரம்பித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ டிஜிட்டல் உலகின் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார் என்றே கூறவேண்டும்.

ஆம் தனது யூடியூப் பக்கத்தை ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே பல உலக சாதனைகளை ரொனால்டோ படைத்துள்ளார். இதன் மூலம் குறிப்பிடத்தக்க ஏழு மைல்கற்களையும் ரொனால்டோ அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், MrBeastஇன் யூடியூப் பக்கம் கொண்டுள்ள மூன்று சாதனைகளையும் முறியடிப்பார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதில் முதலாவது சாதனையாக ஒரு மாதத்தில் அதிக சந்தாதாரர்களைப் பெற்றமையாகும். கடந்த ஜீன் 2024இல் துல்லியமாக 28,749,540 சந்தாதாரர்களை MrBeast யூடியூப் பக்கம் பெற்றிருந்தது.

இரண்டாவது சாதனை 30 நாட்களில் அதிக சந்தாதாரர்களைப் பெற்றமையாகும். இதன்படி, கடந்த மே 30ஆம் திகதி பிற்பகல் 8.20 மணி முதல் ஜூன் 29ஆம் திகதி பிற்பகல் 8.19 மணி வரை 29,004,703 சந்தாதாரர்கள் பெறப்பட்டிருந்தனர்

மூன்றாவதாக மிக வேகமாக 50,000,000 சந்தாதாரர்களைப் பெற்ற யூடியூப் பக்கத்தின் சாதனையும் MrBeast வசம் உள்ளது. கடந்த மே 15ஆம் திகதி முதல் ஓகஸ்ட் இரண்டாம் வரையான 79 நாட்களில் இந்த சாதனை அடையப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 39 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது அதிகாரப்பூர்வமாக யூடியூப் பக்கத்தை ஆரம்பித்து வெறும் 24 மணி நேரத்தில் அடைந்த சாதனைகளை கருத்தில் கொண்டு, மேற்கூறிய அனைத்து சாதனைகளையும் எளிதில் முறியடிக்க முடியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது யூடியூப் பக்கத்தை ஆரம்பித்து ஒரு மணி நேரத்தில் அதிக சந்தாதாரர்களைப் பெற்ற சாதனையை அவர் முதலில் படைத்தார். இதன்படி, ஒரு மணி நேரத்தில் 1,270,000 புதிய சந்தாதாரர்களை பெற்றிருந்தார்.

இரண்டாவதாக 12 மணிநேரத்தில் 10 மில்லியன் சந்தாதாரர்களை மிக வேகமாக ரொனால்டோவின் யூடியூப் பக்கம் பெற்றிருந்தது.

ரொனால்டோவின் யூடியூப் பக்கத்தில் ஒரே நாளில் 16,000,000 சந்தாதாரர்கள் இணைந்தனர். இதுவும் ஒரு சாதனையாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கால்பந்து உலகில் ரொனால்டோவின் சக போட்டியாளராக பார்க்கப்படும் லியோனல் மெஸ்ஸி 2006ஆம் ஆண்டே தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தை ஆரம்பித்திருந்தார்.

இதுவரை 207 காணொளிகளை பதிவிட்டுள்ள மெஸ்ஸி, வெறும் 2.33 மில்லியன் சந்தாதாரர்களை மட்டுடே குவிக்க முடிந்தது. எனினும், ரொனால்டோவின் யூடியூப் பக்கம் கற்பனை செய்ய முடியாத சில சாதனைகளை படைத்துள்ளது.

சுவாரஸ்யமாக, மெஸ்ஸியின் யூடியூப் பக்கத்தில் மிகவும் பிரபலமான காணொளியாக துபாய் எக்ஸ்போ 2020க்கான விளம்பர காணொளி இடம்பெற்றுள்ளது.

இந்த காணொளி 4.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளதுடன், 69 ஆயிரம் லைக்குகள் மற்றும் 2800 கமெண்டுகளை பெற்றுள்ளது.

எனினும், இதற்கு நேர்மாறாக, ரொனால்டோவின் முதல் காணொளி, அவரது யூடியூப் பக்கம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே வெளியிடப்பட்டது.

இந்த காணொளி வியக்கத்தக்க வகையில், 9.8 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளதுடன், 1.1 மில்லியன் லைக்குகள் மற்றும் 60 ஆயிரம் கமெண்டுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.