இலங்கையின் பொருளாதார வளர்ச்சி: பெரும் தடையாக இருக்கும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள்

0
12
Article Top Ad

வினை திறனற்ற நிர்வாகம், மோசமான மேற்பார்வை, மோசடியான கொள்முதல் செயல்முறைகள், அரசியல் தலையீடு, வெளிப்படைத் தன்மையின்மை மற்றும் ஊழல் மிக்க இலங்கை அரசுக்கு சொந்தமான நிறுவனங்களினால் இலங்கை பொருளாதார வளர்ச்சிக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தியத்தின் ஆளுமையை கண்டறியும் மதிப்பீடு (GDA) அறிக்கை தெரிவிக்கின்றது.

அரசு செல்வாக்கு செலுத்தும் தொலைத்தொடர்பு, வங்கி, துறைமுகங்கள், பெட்ரோலியம் மற்றும் வலுச்சக்தி உள்ளிட்ட நானுறுக்கும் மேற்பட்ட முப்பத்திமூன்று துறைகளில், 250,000 மேலான தொழிலாளர்களை பணிக்கு வைத்துள்ளதால் அவை ஒரு திறமையற்ற வீக்கமடைந்த பணித்துறையை உருவாகியுள்ளது.

முதலீடுகளின் ஊக்கத்தை பாதிக்கின்றது

இலங்கையின் மொத்த கடன் சுமையில் 10 வீதம் இலங்கை அரசுக்கு சொந்தமான நிறுவனங்களினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அரசின் நிதி இருப்பை மேலும் மோசமாகியுள்ளதாகவும் அவ்வறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.

அரச நிறுவனங்களின் வெளிப்படையற்றத் தன்மை பலவீனமான மேற்பார்வை பொது வளங்களை வீண் விரயம் செய்தல் மற்றும் ஊழல் நடவடிக்கைகள் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை முடக்கியுள்ளதாக அடையாளப்படுத்துகின்றது.

அத்துடன், தொலைத்தொடர்பு, வங்கி மற்றும் வலுச்சக்தி போன்ற முக்கிய துறைகளில் ஆதிக்கம் செலுத்தி சந்தைப் போட்டித் தன்மை, புத்தாக்கங்கள் சந்தை சமநிலையை சிதைகின்ற அதேவேளை தனியார் முதலீடுகளின் ஊக்கத்தையும் பாதிக்கின்றது.

இந்த பிரச்சினைகளின் காரணமாக இலங்கை நாடாளுமன்ற மேற்பார்வையில், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை சீரமைக்கும் கொள்கைகளுக்கு அமைவாக வணிகமயமாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட முயறசிகள் நீண்ட இழுபறிக்கு மத்தியில் கைவிடப்பட்டது. அதனை தொடர்ந்து அரச நிறுவனங்கள் அதே செயற்பாட்டில் இயங்கியதால் நிலைமை மேலும் மோசமடைந்தது.

தனியார் முதலீடுகளை ஈர்க்கும்

2020ஆம் ஆண்டில் பல உயிர்களை பலி கொண்ட மற்றும் வீடுகளை எரித்த தொடர் எரிவாயு சிலிண்டர் வெடிப்புகள் தேசத்தை உலுக்கியது. அதன் குற்றவாளி யார்? தரமற்ற எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்த அரசுக்கு சொந்தமான லிட்ரோ காஸ் நிறுவனமாகும்.

அரசுக்கு சொந்தமான அரச மருந்து கூட்டுத்தாபனம் (SPC) தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து விநியோகித்து ஊழலில் சிக்கியது. 2019ஆம் ஆண்டில் முக்கியமான இரத்த உற்பத்தி பொருளான மனித இம்யூனோ குளோபுலின் தரம் குறைந்த கொள்கலன் ஓன்று சட்டத்தினுடாக நழுவிச் சென்று நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியது.

கடுமையான தரக்கட்டுப்பாடு இல்லாமை மற்றும் சில மருந்து இறக்குமதிகளில் SPC யின் ஏகபோக உரிமை பொது மக்களின் ஆபத்தான நிலைக்கு தள்ளியது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், இலங்கையை அதன் பொருளாதார புதைகுழியில் இருந்து மீட்பதற்காக தனியார் மயப்படுத்துதல் அவசியமாகின்றது. தனியார்மயப்படுத்தல் அரசின் நிதி அழுத்தங்களை குறைக்கும். நலிந்த நிறுவனங்களில் செயல்திறனை மேம்படுத்தும். தனியார் முதலீடுகளை ஈர்க்கும். முக்கியமாக அரசியல்வாதிகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் ஆதிக்கத்தை துண்டிக்கும்.

பொருளாதார வருவாயை பெற்றுக்கொடுக்கின்றது

இது, இலாபத்தை முன்னுரிமையாக கொண்டிருப்பதால் சந்தை ஒழுக்கத்தை உட் புகுத்துகின்றது. அது மேம்பட்ட செயல்திறன் மற்றும் குறைவான செலவுகளுக்கு வழிவகுக்கின்றது. நவீன மயமாக்கல் மற்றும் விரிவாக்கத்துக்கு தனியார் முதலீடுகளை ஈர்ப்பதால் அரசுக்கும் வருவாய் அதிகரிக்கின்றது.

மேலும், அரசு சொத்துக்களை விற்பது பொருளாதாரத்தின் மீதான அரசியல்வாதிகள் மற்றும் கந்து வட்டிகளின் பிடியை பலவீனப்படுத்தி ஊழலுக்கான வாய்ப்புகளை குறைகின்றது.

செயல்திறனற்ற அரச நிறுவனங்கள் சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற முக்கிய துறைகளில் வளங்களை வீண் விரயம் செய்யாமல் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் தாம் சுமையாக இருக்கின்றோம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

அளவுக்கதிகமான அரச பணியாளர்களின் வேலை இழப்புகள் அரச நிறுவனங்களின் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகும். அதிகளவிலான பணி நீக்கங்கள் செய்யும் பொது அரசு தலைமையேற்க வேண்டும். தன்னார்வ துண்டிப்புகளுக்குரிய இழப்பீடுகளை வழங்குவது அதிக செலவுடையதாக இருந்தாலும் அதிக பொருளாதார வருவாயை பெற்றுக்கொடுக்கின்றது.

சொத்துத் பறிப்பு பொதுவாக நிகழ்கிறது

பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் வேலை சந்தையில் மீண்டும் இணைய உதவும் வகையில் மறுபயிற்சி திட்டங்களுடன் இணையக்கப்படவேண்டும். வேலை இழப்புகள் நியாயமான கவலையாக இருந்தாலும் சிறிய வேலை ஒன்றிக்காக அளவுக்கதிகமான சேவையாளர்களை பணிக்கமர்த்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. செயல்திறனுள்ள பொருளாதாரத்தின் நீண்ட கால பலன்கள் குறுகிய கால கவலைகளை விட மிக அதிகம்.

அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார் மயப்படுத்துதலின் போது நுணுக்கமான புரிதல் அவசியமாகின்றது. தனியார் முதலீட்டாளர்கள் மதிப்பு குறைந்த அரசுக்கு சொந்தமான மதிப்பு குறைந்த நிறுவனங்களை வாங்கி மதிப்பு மிக்க சொத்துக்களை துண்டுதுண்டாக விற்று ஏனையவற்றை கைவிட்டு விடுவார்கள்.

இதனால் வேலை இழப்புகள் ஏற்படும் என விமர்சகர்கள் அஞ்சுகின்றார்கள். இருப்பினும், இந்த கண்ணோட்டம் முறையாக ஒழுங்குபடுத்தப்பட்டால் பொருளாதார செயல்திறனை மேம்படுத்தக்கூடிய சேவையை வழங்க முடியும், ஒரு நிறுவனத்தின் பாகங்கள் முழுதாக மதிப்பு தருவதை விட, தனித்தனியாக மதிப்புமிக்கதாக இருக்கும்போது, பெரும்பாலும் தவறான முகாமைத்துத்வம் அல்லது வளங்களை குறைவாகப் பயன்படுத்துத்வதால், சொத்துத் பறிப்பு பொதுவாக நிகழ்கிறது.

தனியார் மயமாக்குவதற்கான தீர்க்கமான நடவடிக்கைகள் அவசியம்

இந்த பிரச்சனைகள் இலங்கை அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் பரவலாக உள்ளன. நேர்மையற்ற முதலீட்டாட்டாளர்கள்’ குறிப்பாக பலவீனமான ஒழுங்குமுறை சூழல்களில், சொத்துக்களை விற்பனை செய்து கொள்வதற்கு குறை மதிப்பீடு செய்வதன் மூலமும் அரசியல் தொடர்புகளினுடாகவும் நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

அரசுக்கு சொந்தமான நிறுவன மறுசீரமைப்பு பிரிவின் ஒரு பகுதியாக சொத்துக்களின் தேய்மான மதிப்பீட்டு செயல்முறைகள் மற்றும் வெளிப்படையான போட்டி ஏலங்கள் இந்த சிக்கலை தீர்க்கின்றன. செயல்திறன் விதிகள் மற்றும் சொத்து விற்பனை மீதான தற்காலிக கட்டுப்பாடுகளை உள்ளடக்கி ஒப்பந்தங்களை கட்டமைப்பது முற்றிலும் அரச சொத்து விற்பனை தொடர்பான ஊகங்களை அகற்றுவதற்கு அனுகூலமாக இருக்கும்.

உலக வங்கிக் குழுமத்தின் ஒரு அங்கமமான சர்வதேச நிதிக்கூட்டுத்தாபனம் வளர்ந்து வரும் நாடுகளில் துறை அபிவிருத்தியை ஊக்குவிக்க முதலீடு, ஆலோசனை மற்றும் சொத்து மேலாண்மை போன்ற சேவைகளை வழங்கிவரும் ஒரு பன்னாட்டு நிதிநிறுவனமாகும், அந்தவகையில், அரசுக்கு சொந்தமான நிறுவன மறுசீரமைப்பு பரிவர்தனைகளில் அந்நிறுவனம் உதவுகின்றது.

எந்தவொரு சொத்து விற்பனையும் அரசியல் ரீதியாக தொடர்புடையவர்களின் பைகளை நிரப்புவதற்கு பதிலாக பொருளாதார செயல்திறன் மற்றும் பொது நலனுக்கு உண்மையான பங்களிப்பை வழங்குவதை உறுதி செய்கின்றது.

தற்போதைய பொருளாதார வீழ்ச்சியை இலங்கையால் தாங்கிக்கொள்ள முடியாது. தனியார் நிறுவனங்கள் செயல்படும் சந்தையில் போட்டியை அதிகரிக்கும் ஒழுங்குமுறை சீர்த்திருத்தங்களுடன் தனியார்மயமாக்கல் இருக்கவேண்டும். ஏகபோகங்கள் நிலவும் துறைகளில் நியாயமான போட்டியை உறுதி செய்வதற்கும் நுகர்வோர் நலனை பாதுகாப்பதற்கும் வலுவான மற்றும் கட்டுப்பாடுகளுடைய பொறிமுறை அவசியமாகின்றது.

செயற்திறனின்மை மற்றும் ஊழலிலிருந்து விடுபடவும் நிலையான பொருளாதார வளர்ச்சியை தொடங்கவும் அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கான தீர்க்கமான நடவடிக்கைகள் அவசியம்.

வலுவான ஊழல் எதிர்ப்பு சட்டங்கள்

இலங்கையில் உள்ள அரச நிறுவனங்கள் ஊழல் நிறைந்த அரசியல் உயிர்நாடிகளாக உள்ளன. அரசியல்வாதிகள் மற்றும் கூட்டாளிகளுக்கு புதையல்களாக செயல்படுகின்றன. இந்த அரச நிறுவனங்கள் அரசியல் கட்சியின் ஆதரவாளர்களுக்கு வேலைகள், நிதியாளர்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கி ஊழல் மிக்க இடமாக இருக்கின்றது.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனமானது அதியுயர் டெண்டர்களின் மூலம் அரசியல்வாதிகளின் பணப்பைகளை நிரப்பி நிரப்பும் அதேவேளை நாட்டை வங்குரோத்து அடைய செய்தது.

நாடு மீண்டும் நிலையான வளர்ச்சியை அடைய சீர்திருத்தங்களை செய்வது மட்டுமல்ல இந்த அரசியல் வணிக வளாகத்தையும் அகற்ற வேண்டும். அரச நிறுவனங்களின் தீவிர தனியார் மயமாக்கல் துணிச்சலான, விரிவான சீர்திருத்தங்கள் மற்றும் வலுவான ஊழல் எதிர்ப்பு சட்டங்கள் மற்றும் அதிகாரம் பெற்ற நீதித்துறை ஆகியவற்றால் மட்டுமே இந்த சுழற்சியை உடைக்க முடியும்.

தனியார்மயமாக்கல் என்பது வெறும் பொருளாதார தேவையல்ல. அரச நிறுவனங்களை வெளிப்படையாகவும் போட்டிதத்தன்மையுடனும் விற்பனை செய்வதன் மூலம் செயல்திறனை மேம்படுத்துவது மட்டுமின்றி ஊழல் பசியோடு இருக்கும் அரசியல்வாதிகளையும் பட்டினியாக்கின்றோம். கொள்கைகள் மற்றும் செயல்திறனில் போட்டியிட அரசியல்வாதிகளை கட்டாயப்படுத்துகின்றோம்.

இது பொருளாதார மீட்சிக்கு மட்டுமல்ல ஆரோக்கியமான பொறுப்புள்ள ஜனநாயகத்திற்குமான பாதையை வகுக்கின்றது. இலங்கையின் எதிர்காலம் அதன் செழிப்பு அதன் நிர்வாகம் அதன் ஆன்மா எல்லாமே அரசியல் தொடர்பில்லாமல் சுயாதீனமாக இயங்குவதில் உள்ளது. அரைகுறை நடவடிக்கைகளுக்கான நேரம் முடிந்து விட்டது.

மில்ரோய் அந்தனி – அட்வொகட்டா