ஐஎம்எப் உடன்படிக்கையும் இலங்கையின் எதிர்காலமும்: முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு

0
19
Article Top Ad

ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்காலம் குறித்து வேட்பாளர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

தற்போதைய ஜனாதிபதி ஐஎம்எப் திட்டத்தை முழுவதுமாக தனது மறுதேர்தலில் தங்கியிருப்பதாக வடிவமைக்க முயற்சிக்கிறார், அவருடைய தலைமை இல்லாமல் அது தோல்வியடையும் என்றும் கூறி வருகிறார்.

அநுராதபுரம் சல்தாது மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில், சஜித் பிரேமதாச அல்லது அநுரகுமார ஆட்சிக்கு வந்தால் இவை அனைத்தையும் இழக்க நேரிடும் என அவர் கருத்து வெளியிட்டார்.

வெறும் வேட்பாளராக மட்டுமன்றி தற்போது இந்நாட்டின் ஜனாதிபதியாக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க வெறும் அரசியல் இலாபங்களுக்காக வெளியிடும் இவ்வாறான அறிக்கைகள் பொதுமக்களை சிந்திக்க வைத்துள்ளது.

எவ்வாறாயினும், வரி அதிகரிப்பு மற்றும் செலவினக் குறைப்புகளின் சமூக மற்றும் பொருளாதாரச் செலவுகளில் கவனம் செலுத்தும் எதிர்க்கட்சி வேட்பாளர்கள், பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதற்கும் நிதி ஒருங்கிணைப்பை விட பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் தாங்கள் செயல்படுவதாகத் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

ஐஎம்எப் இன் உடன்படிக்கைக்கு மனித முகம் கொடுக்கப்படும் என சஜித் பிரேமதாச கூறுவதுடன், சர்வதேச நாணய நிதிய குழுவிடம் தமது முன்மொழிவுகளை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதாக அவரது தரப்பு வலியுறுத்தியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி ஐஎம்எப் இன் உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ள நிலையில் மக்கள் ஆதரவு இல்லாத ஒரு அரசாங்கத்தால் எட்டப்பட்ட ஒப்பந்தத்தை, மக்கள் ஆதரவுடன் கூடிய ஒரு அரசாங்கத்தால் எளிதாக திருத்த முடியும் மற்றும் ஐஎம்எப் அதற்கு போதுமான நெகிழ்வுத்தன்மையைக் காண்பிக்கும் என்று தேசிய மக்கள் சக்தி நம்புகிறது.

சீனா (7.4 பில்லியன் டொலர்) மற்றும் இந்தியாவிற்கு (1 பில்லியன் டொலர்) கணிசமான இருதரப்புக் கடன்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஐஎம்எப் ஐ சார்ந்திருப்பதைக் குறைக்க இந்தப் பிராந்திய பிரநிதிகளுடனான உறவுகளை வலுப்படுத்த ஏனைய வேட்பாளர்கள் முன்மொழிந்துள்ளனர்.

மற்றொரு பெரிய கடன் வழங்குநரான ஜப்பானை, எதிர்க்கட்சியால் முன்மொழியப்பட்ட ஒரு மாற்று பொருளாதார மூலோபாயமாக பரிசீலிக்கலாம்.

எவ்வாறாயினும், இலங்கையின் பொருளாதார நிலைமையில் எஞ்சியுள்ள வரையறுக்கப்பட்ட தெரிவுகளின் அடிப்படையில், அனைத்து ஐஎம்எப் உடன்படிக்கைகளையும் நிராகரிப்பது கடினமாகத் தெரிகிறது.

மாறாக, நாட்டின் பொறுப்புகளைச் சந்திக்கவும் உள்நாட்டுப் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளவும் ஐஎம்எப் ஐ மிகவும் திறம்பட பயன்படுத்துவதை எதிர்க்கட்சி வேட்பாளர்கள் பரிசீலிக்க வேண்டும் என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.