Article Top Ad
ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 54,000 பொலிஸாரை ஈடுபடுத்தவுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அசங்க கரவிட்ட தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (29) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த பதாகைகள் மற்றும் கட்அவுட்களை நீக்குவதற்காக 1500 தொழிலாளர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் இடம்பெறும் சட்டவிரோத தேர்தல் பிரசார செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் கூறியுள்ளார்.