பங்களாதேஷூக்கும் உதவும் ஐஎம்எப்: கடும் பொருளாதார நெருக்கடி

0
26
Article Top Ad

பங்களாதேஷில் காணப்பட்ட பொது மக்கள் கிளர்ச்சி காரணமாக உருவாக்கப்பட்டுள்ள இடைக்கால அரசாங்கத்தை நடத்திச் செல்வதற்கான நிதி நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன் காரணமாக சர்வதேச நிதி வழங்கும் நிறுவனங்களிடமிருந்து 8 பில்லியன் ரூபாய் டொலர்களை பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கம் கோரியுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் எனப்படும் ஐஎம்எப் , உலக வங்கி மற்றும் ஆசிய வங்கி உள்ளிட்ட ஏனைய கடன் வழங்கும் நிறுவனங்களிடம் நிதியைப் பெற்றுக் கொள்ள பங்காதேஷ் எதிர்பார்த்துள்ளது.

கடந்த பல மாதங்களாக அந்நாட்டில் ஏற்பட்ட பொது மக்கள் கிளர்ச்சியுடன் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.