தமிழர்களுக்கு அனுரகுமார கூறிய எச்சரிக்கைச் செய்தி: மற்றுமொரு இனவாத மோதல் ஏற்படுமா?

0
29
Article Top Ad

ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சிக்கு வாக்களிக்கத் தவறினால் இனவாத மோதலுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்பதே தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வழங்கியுள்ள மறைவான செய்தி என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தேசப்பற்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் சுகத் ஹேவாபத்திரன, இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போது இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“வடக்கில் உள்ள தமிழ் சமூகம் தென்னிலங்கையின் வாக்குப்பதிவு முறையை பின்பற்றி தனக்கு வாக்களிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார அண்மையில் வடக்கில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.

அவ்வாறு செய்யத் தவறினால் வடக்கில் உள்ள தமிழர்கள் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் அனுரகுமார் கூறியதாக சுகத் ஹேவாபத்திரன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் இன துருவமுனைப்பு ஏற்பட்டால் இனவாத மோதல் ஏற்படலாம் என்பதே இங்கு மறைத்துக் கூறப்பட்ட செய்தியாகும்” என சுகத் ஹேவாபத்திரன சுட்டிக்காட்டியுள்ளார்

“ஜூலை 1983 கலவரத்தின் பின்னணியில் ஜே.வி.பி இருந்தது, ஆனால் இந்த விஷயம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2019 ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆதரித்த தேசப்பற்று ஐக்கிய தேசியக் கட்சி இந்த ஆண்டு சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கிறமை குறிப்பிடத்தக்கது.