பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக விஜய்சேதுபதி வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

0
61
Article Top Ad

விஜய் டிவியில் விரைவில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஆரம்பம் ஆகப்போகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு புதிய ஹோஸ்ட்டாக விஜய் சேதுபதி மாறியுள்ளார்.

இந்நிலையில், விஜய் சேதுபதியின் சம்பளம் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் நடைபெற்றாலும், அதனை தொகுத்து வழங்கும் பிரபலங்களுக்கு அத்தனை நாட்களும் வேலை இல்லை.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் ஷோவில் தான் அவர்கள் வருவார்கள். அதற்கான படப்பிடிப்பு அதிகபட்சமாக வெள்ளிக்கிழமை அன்று இவிபி பிலிம் சிட்டியில் நடைபெறும்.

ஒரே நாளில் 2 நாளுக்கான ஷூட்டிங்கை நடத்தி விடுவார்கள்.

அதாவது ஒட்டுமொத்தமாகவே பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக தொகுப்பாளர் 15 நாட்கள் தான் வேலை செய்வார் எனக் கூறுகின்றனர்.

பிக் பாஸ் 8வது சீசனை தொகுத்து வழங்க நடிகர் விஜய் சேதுபதிக்கு அதிகபட்சமாக 60 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

உலக நாயகனுக்கு கொடுத்ததை விட பாதி தான் சம்பளம் என்றாலும், விஜய் சேதுபதி படங்களில் ஹீரோவாக நடிக்க 30 முதல் 35 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் நிலையில், இது அதிகம் என்றே கூறுகின்றனர்.

விஜய் சேதுபதி எப்படி இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தன்னுடைய ஸ்டைலில் தான் கொண்டு செல்வார் என்றும் நிச்சயம் முதல் ப்ரோமோவை போல பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியும் புதுசா ரசிகர்களுக்கு இருக்கும் என அனைவரும் இந்த முறையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.