நாடாளுமன்றம் கலைக்கப்படுமா?: பாரிய விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் – சட்டத்தரணி எச்சரிக்கை

0
8
Article Top Ad

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், நாட்டுக்கும் மக்களுக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஊடக மையத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“ ஜனநாயக கட்டமைப்பிற்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஜனாதிபதிக்கு, அதிகார பரிமாற்றம், மக்களுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தாமல் ஜனநாயக ரீதியாக நடைபெற வேண்டும்.

அரசியலமைப்பின் பிரகாரம் எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. இவ்வாறானாதொரு சூழ்நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கு ஜனநாயக ரீதியாக அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அதனால் மக்கள் பாதிக்கப்படமாட்டார்கள்.

ஒருவேளை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் அவர் நாட்டுக்கும் மக்களுக்கும் செய்யும் மிகவும் நேர்மையற்ற செயலாகும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here