ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு கடந்த சில மாதங்களாக பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளியாகிவந்தன.
இந்த கருத்துக் கணிப்புகளில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவும் மாறி மாறி முன்னிலை பெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் கடந்த மூன்று வாரங்களாக சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கான ஆதரவு அலை நாட்டில் அதிகரித்துள்ளதாகவும் இந்த இரண்டு வேட்பாளர்களை ரணில் விக்ரமசிங்க மிஞ்சியுள்ளதாகவும் புலனாய்வு தகவல்கள் அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவல்களை “இந்திய றோ“ வும் புதுடில்லிக்கு அனுப்பியுள்ளதாக இராஜதந்திர மட்டங்களில் அறிய முடிகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கான ஆதரவு தற்போது நாட்டில் 54 வீதத்தை எட்டியுள்ளதாகவும் இன்றைய இறுதிகட்ட பிரச்சாரத்தின் பின்னரும் நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெற போகும் ரணிலின் சில நகர்வுகள் அவருக்கான ஆதரவை மேலும் அதிகரிக்கும் என்றும் புலனாய்வுத்துறை தகவல் வழங்கியுள்ளது.
இதேவேளை, இன்று நள்ளிரவுடன் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் அனைத்து நிறைவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது