இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் துலிப் சமரவீர, அமைப்பின் நடத்தை விதிகளை கடுமையாக மீறய குற்றச்சாட்டில் 20 ஆண்டுகள் அவுஸ்ரேலியாவில் கிரிக்கெட் செயல்பாடுகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, துலிப் சமரவீர, WBBL மற்றும் BBL அணிகள் உள்ளிட்ட பிராந்திய கிரிக்கெட் சங்கங்களில் எந்தப் பதவியையும் வகிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியா மாகாணத்தில் முன்னாள் மகளிர் கிரிக்கெட் பயிற்சியாளர் துலிப் சமரவீர, தொழில்முறை மட்டத்தில் விளையாடிய ஒரு வீரருக்கு எதிராக தவறான முறையில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார். அதன் காரணமாகவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் அவுஸ்திரேலியாவும், கிரிக்கெட் விக்டோரியாவும் ஒரு கூட்டு அறிக்கையில், வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்க உறுதி பூண்டுள்ளதாகவும், துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நலன் மிகவும் முக்கியமானது என்றும் கூறியுள்ளன.
துலிப் சமரவீர தொடர்பான தீர்மானத்துக்கு விக்டோரியா கிரிக்கட் நிறுவனமும் வலுவாக ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.