இஸ்ரேல் – காசா போர் நிறுத்த ஒப்பந்தம்: நெதன்யாகுவின் தீர்மானத்தால் ஜனநாயக கட்சியினர் கவலை

0
33
Article Top Ad

அமெரிக்காவில் அடுத்த மாதம் 05 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தேர்தலில் பெரிதும் தாக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒத்திவைக்கின்றாரா என்பது குறித்து தனக்கு தெரியவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஆனால் வேறு எந்த நிர்வாகமும் இஸ்ரேலுக்கு தன்னைப்போன்று உதவவில்லையென சுட்டிக்காட்டிய பைடன் நெதன்யாகு இதனை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவித்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க ஜனாதிபதியின் அழைப்புகளை நெதன்யாகு புறக்கணிப்பதாக ஜனநாயகக் கட்சியினர் சிலர் கவலை வெளியிட்டனர்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் வாய்ப்புகளுக்கு விளைவுகளை ஏற்படத்தக் கூடும் என்றும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் இராஜதந்திர உடன்படிக்கையைப் பெறத் தவறியமை, பைடனுக்கும் துணை ஜனாதிபதியும் ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான கமலா ஹாரிஸுக்கும் கவலையளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரேபிய-அமெரிக்கர்களிடையே ஜனாதிபதியின் அனுமதி மதிப்பீடு கடந்த வருடத்தில் சரிந்துள்ளது.

பெரும்பாலும், இஸ்ரேலின் இராணுவப் பிரச்சாரத்திற்கான அமெரிக்க ஆதரவின் கோபம் காரணமாக, நவம்பரில் கட்சிக்கு பாதகமாக அமையலாம் என்றும் கூறப்படுகிறது.

பைடன் பல மாதங்களாக இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் ஒரு இராஜதந்திர உடன்படிக்கைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.

தேர்தலுக்கு முன்னரான இந்த ஒப்பந்தம் ஜனாதிபதிக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் சாதகமான விளைவை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்புளுக்கு மத்தியில் வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.