கனடாவில் புகலிடத் தஞ்சம் கோருபவர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துவருகின்றது.
உலகின் பல்வேறு பிரதேசங்களில் நடைபெற்றுவரும் யுத்தங்கள் உள்நாட்டு மோதல்கள் ,ஜனநாயக விரோத ஆட்சிகள் முதற்கொண்டு தமது பால் நிலை வேறுபாடு என துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் மக்கள் பாதுகாப்பு நெருக்கடிகளை மேற்கொண்டுவரும் மக்கள் கனடாவில் அகதித் தஞ்சம் கோரி வருகின்றார்கள்.
2024ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் வரையான காலப்பகுதியில் கனடாவிலுள்ள மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் மொத்தமாக 119, 305 பேர் புகலிடத் தஞ்சம் கோரியுள்ளனர்.
இதில் அகதிகளவானவர்கள் கனடாவின் ஒன்டாரியோ மாநிலத்தில் புகலிடத் தஞ்சம் கோரியுள்ளனர். இதில் அகதிகளவானவர்கள் கனடாவின் ஒன்டாரியோ மாநிலத்தில் புகலிடத் தஞ்சம் கோரியுள்ளனர். இங்கு மொத்தமாக 62, 745 பேர் தஞ்சம் கோரியுள்ளனர்.
இரண்டாவது இடத்தில் கியுபேக் மாநிலம் உள்ளது. அங்கு 2024ம் ஆண்டு ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையான காலப்பகுதியில் மொத்தமாக 41,415 பேர் புகலிடத் தஞ்சம் கோரியுள்ளனர்.
2023ம் ஆண்டு மொத்தமாக 143, 365 பேர் கனடாவில் புகலிடத் தஞ்சம் கோரியுள்ளனர்.இதில் அதிகளவானவர்கள் ஒன்டாரியோ மாநிலத்தில் 65, 250 பேரும் கியுபேக் மாநிலத்தில் 63 ,070 பேரும் புகலிடத் தஞ்சம் கோரியுள்ளனர்.
2023ம் ஆண்டில் அதிகபட்சமாக மெக்ஸிகோ நாட்டிலிருந்தே கனடாவில் புகலிடத் தஞ்சம் கோரியுள்ளனர்.மெக்ஸிகோவிலிருந்து அதிகபட்சமாக 25, 236 பேர் புகலிடத் தஞ்சம் கோரியுள்ளனர்.
அதற்கடுத்ததாக ஹெய்டியிலிருந்து மொத்தமாக 10121பேரும் துருக்கியில் இருந்து 9413 பேரும் இந்தியாவில் இருந்து 9060 பேரும் கொலம்பியாவில் இருந்து 8001 பேரும் நைஜீரியாவில் இருந்து 6513 பேரும் ஈரானில் இருந்து 5980 பேரும் கனடாவில் புகலிடத் தஞ்சம் கோரியுள்ளனர்.
இலங்கை இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கக்கூடும் என இந்த விடயங்களை தீவிரமாக ஆராய்ந்து பார்க்காமல் பேசிவருவதை நீங்களும் கேட்டிருப்பீர்கள் . அப்படியானால் உண்மையில் எத்தனை பேர் இலங்கையில் இருந்து புகலிடத்தஞ்சம் கோரியுள்ளர் என்றால் உத்தியோகபூர்வ தகவல்களின் அடிப்படையில் 2023ம் ஆண்டில் 2055 பேர் மாத்திரமே புகலிடத் தஞ்சம் கோரியுள்ளனர். இந்த வகையில் இந்தப்பட்டியலில் மிகவும் கீழ் நிலையில் தான் இருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.