திருடர்களை பிடிக்க சிறிது காலம் செல்லும்: தேசிய மக்கள் சக்தி

0
21
Article Top Ad

நாட்டில் கடந்த அரசாங்கங்களில் இடம்பெற்ற ஊழல் – மோசடிகள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைக்கப்பெறுமாயின் ஊழலுக்கு எதிரான அமைப்பிற்கு வழங்குமாறு குறித்த அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி கொள்ளையர்களுடன் எவ்வித உறவையும் பேணாது என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த மாதம் 23ஆம் திகதி அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து 24ஆம் திகதி மிகச்சிறிய அமைச்சரவையை நியமித்து மக்கள் எதிர்பார்த்தவாறு நிதி முறைகேடுகள் செய்தவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த ஆரம்பித்துள்ளார்.

புதிய அரசாங்கம் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பொதுமக்கள் வழங்கும் தகவல்களும் மிகவும் முக்கியமானவையாகும். அந்தத் தகவல்களின் மூலம் நிதி முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத வேலைகளைச் செய்த நபர்களுக்கு நீதிமன்றத்தின் ஊடாக எவ்வாறு சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது என்பதை பொதுமக்கள் அவதானிக்க முடியும்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தமக்கு எதிராக சட்டத்தை விரைவில் அமுல்படுத்துமாறு கோரி வருவதாகவும், அவசரப்படாமல் ஆதாரங்களுடன் தகவல்களைப் பெற்ற பின்னரே இதனைச் செய்ய வேண்டுமென்பதனால் முறையாகச் செய்வதற்கு சிறிது காலம் பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.