Article Top Ad
சீனாவின் வுஹான் ஓபன் தொடரின் இறுதிப் போட்டியில் உள்ளூர் வீராங்கனையான ஜெங் கின்வெனை 6-3, 5-7, 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்து அரினா சபலெங்கா சம்பியன் பட்டம் வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் 26 வயதான பெலருஷ்யன் வீராங்கனை வுஹான் ஓபன் தொடரை மூன்று முறை வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.
இது அரினா சபலெங்காவின் டென்னிஸ் தொழில் வாழ்க்கையில் பெறும் 17 ஆவது சம்பியன் பட்டமாகும்.
WTA 1000 இறுதிப் போட்டியை எட்டிய முதல் சீன வீராங்கனை என்ற பெருமையைப் பெற்ற தற்போதைய ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற ஜெங், மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாம்பியனுக்கு எதிராக தனது நான்கு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.