100 வருடங்களுக்கு முன்பு எவரெஸ்ட் மலையில் ஏற முயன்று காணாமல் போனவரின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து நெஷனல் ஜியோக்ரபிக் இதழ் கடந்த வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.
காலநிலை மாற்றம் மற்றும் இமயமலையைச் சுற்றி பனி குறைவடைந்துள்ளமையால் உலகின் மிகவும் உயரமான மலையின் உயரத்தை அளவிடுதலை தனது கனவாகக் கொண்டிருந்த மலையேறுபவர்களின் இறந்த உடல்களை அதிகளவில் வெளிப்படுத்துகின்றன.
1924ஆம் ஆண்டில் பிரிட்டன் அண்ட்ரூ மற்றும் ஜோர்ஜ் மல்லோரி ஆகிய இருவரும் முதன் முதலில் கடல் மட்டத்திலிருந்து 29,029 அடி உயரத்தில் எவரெஸ்ட் மலையை அடைய முயற்சித்தனர்.
இம் முயற்சியின்போது இருவரும் காணாமல் போனார்கள்.
இவர்களில் ஒருவரான மல்லோரியின் உடல் 1999ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால்,நெஷனல் ஜியோக்ரெபிக் குழு மத்திய ரோங்க்பக் பனிப்பாறையில் காலின் எச்சங்களை தோலாகக் கொண்ட காலணியொன்றைக் கண்டுபிடிக்கும் வரையில் இர்வின் பற்றி எந்தத் தகவலும் இல்லாமல் இருந்தது.
துல்லியமான ஆய்வில் சிவப்பு லேபிளுடன் கூடிய ஒரு காலுறையை கண்டுபிடித்தனர். அது இர்வினுடையது எனவும் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இக் கண்டுபிடிப்பு குழுவின் தடயங்கள் மலையேற்றத்தின் மிக நீடித்த மர்மங்களை தீர்க்க உதவலாம்.
இர்வின் மற்றும் மல்லோரியே மலையை அளந்த முதல் நபர்கள் என்பதும் உறுதியாகிறது.
எவரெஸ்ட்டின் முதல் ஆவணப்படுத்தப்பட்ட மலை ஏறுதல் ஏறக்குறைய மூன்று தசாப்தங்களுக்கு பின்னர் 1953 மே 29ஆம் திகதி நியூசிலாந்தைச் சேர்ந்த எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஷெர்பா டென்சிங் நோர்கே ஆகியோரால் நிறைவேற்றப்பட்டது.
1963 இல் ஜிம் விட்டேக்கர் மலையில் உச்சியை அடைந்த முதல் அமெரிக்கர் ஆனார்.