ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் முதல் முறையாக ரணில் வெளியிட போகும் அறிவிப்பு

0
16
Article Top Ad

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க நாளை மறுதினம் வியாழக்கிழமை பொது மக்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ரணில் விக்ரமசிங்க பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிடுவது இதுவே முதல் தடவையாகும்.

இந்த விசேட அறிக்கையில் நாட்டின் அரசியல் நடத்தைகள் மற்றும் தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து அவர் வெளிப்படுத்துவார் என தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடமாட்டார் என்பதுடன் தேசிய பட்டியல் ஊடாகவும் அவர் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்க எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லையென அறிவித்தார்.

எவ்வாறாயினும், அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.