எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் – 15 ஆசனங்களைக் கைப்பற்றி தேசிய மக்கள் சக்தி வெற்றி

0
6
Article Top Ad

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் நேற்று இரவு அறிவிக்கப்பட்டன. அதன்படி, தேசிய மக்கள் சக்தி 17 ஆயிரத்து 295 வாக்குகளைப் பெற்று 15 ஆசனங்களைக் கைப்பற்றி முன்னிலை வகிக்கின்றது.

ஐக்கிய மக்கள் சக்தி 7 ஆயிரத்து 924 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 3 ஆயிரத்து 597 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணி 2 ஆயிரத்து 612 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

அத்துடன், பொதுமக்கள் ஐக்கிய சுதந்திர முன்னணி 2 ஆயிரத்து 612 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

சுயேச்சைக் குழு பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 568. அதன்படி, சுயேச்சைக் குழு, 2 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி ஆயிரத்து 350 வாக்குகளைப் பெற்று ஓர் ஆசனத்தைத் தமதாக்கிக் கொண்டது.

தேசிய மக்கள் கட்சி 521 வாக்குகளைப் பெற்று ஓர் ஆசனத்தை வென்றுள்ளது.

நேற்று இரவு நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி டபிள்யூ.ஏ.தர்மசிறி இந்தத் தேர்தல் முடிவுகளை அறிவித்துள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

நேற்றுக் காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குப் பதிவு மாலை 4 மணியுடன் நிறைவடைந்ததையடுத்து, ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இடம்பெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here