இலங்கையில் பலம் வாய்ந்த அரசாங்கம் – பொதுத் தேர்தல் குறித்த முழுமையான பார்வை

0
47
Article Top Ad

நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மகத்தான வரலாற்று வெற்றியை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது.

நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களில் 21 தேர்தல் மாவட்டங்களை தேசிய மக்கள் சக்தி வெற்றிகொண்டுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தை இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றிக்கொண்டது. அதேபோன்று தபால்மூலமான வாக்களில் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தியே வெற்றி பெற்றிருந்தது.

தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 40 ஆசனங்களையும், இலங்கை தமிழரசுக் கட்சி 8 ஆசனங்களையும் புதிய ஜனநாயக முன்னணி 5 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 3 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 3 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1 ஆசனத்தையும்,  ஐக்கிய தேசியக் கட்சி 1 ஆசனத்தையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 1 ஆசனத்தையும், சர்வஜன அதிகாரம் 1 ஆசனத்தையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 1 ஆசனத்தையும், இலங்கை தொழிலாளர் கட்சி 1 ஆசனத்தையும், சுயாதீனக் குழு-17 1, ஆசனத்தையும்  கைபற்றியுள்ளன.

29 தேசிய பட்டியல் ஆசனங்களில் தேசிய மக்கள் சக்தி 18 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 5 ஆசனங்களையும், புதிய ஜனநாயக முன்னணி 2 ஆசனங்களையும், இலங்கை தமிழரசுக் கட்சி 1 ஆசனத்தையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனத்தையும், சர்வஜன அதிகாரம் கட்சி 1 ஆசனத்தையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 1 ஆசனத்தையும் கைப்பற்றியிருந்தன.

நாடாளுமன்றத் தேர்தல் பொலிஸார் மற்றும் முப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் வியாழக்கிழமை இடம்பெற்றது. தேர்தலில் 65 சதவீதமான வாக்கு பதிவாகியிருந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடுகையில் நாடாளுமன்றத் தேர்தலில் குறைவான வாக்கு சதவீதமே பதிவானதுடன், வாக்களிப்பும் மந்தமாகவே இருந்தது.

22 தேர்தல் மாவட்டங்களில் உள்ள 160 தொகுதிகளில் 13,421 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்ததுடன், வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையில் வாக்களிப்பு நடைபெற்றது.

2023ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் நடைபெற்ற இத்தேர்தலில் வாக்களிக்க ஒரு கோடியே 71இலட்சத்து 40ஆயிரத்து 354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

மொத்தமாக 11,148,006 பேர் தமது வாக்குகளை அளித்திருந்தனர். இதில் 667240 வாக்குகள் நிராகரிக்கப்பட்ட வாக்குகளாக பதிவானதுடன், 11, 815, 246 செல்லுப்படியாகும் வாக்குகள் பதிவாகியிருந்தன.

வாக்களிப்பின் போது எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறாது அமைதியான முறையில் தேர்தல் நடந்ததாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

பெறுபேறுகளின் பிரகாரம் 22 தேர்தல் மாவட்டங்களிலும் தபால் மூல வாக்களிப்பில் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தியே வெற்றிபெற்றது. பிரதான வாக்களிப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தை தவிர்த்து ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தியே வெற்றிபெற்றது.

அளிக்கப்பட்ட மொத்த வாக்கில் தேசிய மக்கள் சக்தி 6,863,186 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தி 19,627,16 வாக்குகளையும், புதிய ஜனநாயக முன்னணி 500,835 வாக்குகளையும், இலங்கை தமிழரசுக் கட்சி 257,813 வாக்குகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  350, 429 வாக்குகளையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 87,038 வாக்குகளையும், சர்வஜன அதிகாரம் 178,006 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 66, 234 வாக்குகளையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 65,382 வாக்குகளையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 39,894 வாக்குகளையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 33,911 வாக்குகளையும், சுயேச்சைக் குழு 17 (யாழ்ப்பாணம்) 27,855 வாக்குகளையும், இலங்கை தொழிலாளர் கட்சி 17,710 வாக்குளையும் பெற்று ஆசனங்களையும் பெற்றுக்கொண்டன.

கொழும்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 788,636 வாக்குகளுடன் 14 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 208,249 வாக்குகளுடன் 4 ஆசனங்களையும் பெற்றுள்ளது.

கம்பஹா  மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 898,759 வாக்குகளுடன் 16 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 150,445 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களையும் பெற்றுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 452,398 வாக்குகளுடன் 8 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 128,932 வாக்குகளுடன் 2 ஆசனங்களையும் புதிய ஜனநாயக முன்னணி 34,257 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் வென்றுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 80,830 வாக்குகளுடன் 3 ஆசனங்களையும், இலங்கை தமிழரசுக் கட்சி 63,327 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 27,986 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் 17ஆம் இலக்க சுயேச்சைக்குழு 27,855வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.

வன்னி  மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 39,894 வாக்குகளுடன் 2 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 32,232 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் இலங்கை தமிழரசுக் கட்சி 29,711 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 21,102 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 87,031 வாக்குகளுடன் 2 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 53,058 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் இலங்கை தமிழரசுக் கட்சி 34,168 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி 96,975 வாக்குகளுடன் 3 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 55,498 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 40,139 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.

திகமடுல்ல மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 146,313 வாக்குகளை பெற்று 4 ஆசனங்களையும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 46,899 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 33,911 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் இலங்கை தமிழரசுக் கட்சி 33,632 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.

கண்டி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 500,596 வாக்குகளுடன் 9 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 145,939 வாக்குகளுடன் 2 ஆசனங்களையும் புதிய ஜனநாயக முன்னணி 50,889 ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.

மாத்தளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 181,678 வாக்குகளுடன் 4 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 53,200 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் வென்றுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 161,167 வாக்குகளுடன் 5 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 101,589 வாக்குகளுடன் 2 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 64,672 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.

குருநாகலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 181,678 வாக்குகளுடன் 4 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 53,200 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் வென்றுள்ளது.

அநுராதபுரம் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 331,692 வாக்குகளுடன் 7 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 98,176 வாக்குகளுடன் 2ஆசனங்களையும் வென்றுள்ளது.

பொலனறுவை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 159,010  வாக்குகளுடன் 4 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 43,822 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 239,576 வாக்குகளுடன் 6 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 65,679 வாக்குகளுடன் 2ஆசனங்களையும் வென்றுள்ளது.

மாத்தறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 317,541 வாக்குகளுடன் 6 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 74,475 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் வென்றுள்ளது.

காலி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 406,428  வாக்குகளுடன் 7 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 93,486 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 31,201 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 234,083 வாக்குகளுடன் 5 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 52,170 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 26,268 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.

பதுளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 275,180 வாக்குகளுடன் 6 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 102,958 வாக்குகளுடன் இரண்டு ஆசனங்களையும் புதிய ஜனநாயக முன்னணி 36,450 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் வென்றுள்ளது.

மொனராகலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 174,730 வாக்குகளுடன் 5 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 62,014 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் வென்றுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 368,229 வாக்குகளுடன் 8 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 133,041 வாக்குகளுடன் 3 ஆசனங்களையும் வென்றுள்ளது.

கேகாலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 312,441 வாக்குகளுடன் 7 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 109,691 வாக்குகளுடன் 2 ஆசனங்களையும் வென்றுள்ளது.