மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது

0
1
Article Top Ad

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் ஜனாதிபதி புடின், ‘எங்கள் மீது ஏவுகணை வீசும் நாடு எதுவாக இருந்தாலும் நாங்கள் அணு ஆயுதம் பயன்படுத்துவோம்’ என தெரிவித்திருந்தார்.

அதே போல, ‘அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டிரம்பிடம் போர் நிறுத்தத்தைக் குறித்து பேசவும் தான் தயார்’ எனவும் கூறியிருந்தார். இது உலக நாடுகளிடையே பெரும் பேசும்வண்ணமாக மாறியது. இந்த நிலையில், ரஷ்யாவின் முன்னாள் ராணுவ தளபதியும் உக்ரைனின் தற்போதைய தூதருமான வலேரி ஜலுஷ்னி மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிட்டதாக கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் பேசிய போது, “இந்த 2024ல் மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது. 10,000 வடகொரிய வீரர்கள் குர்ஸ்க் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். உக்ரைன் அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் போரில் தாக்குப்பிடித்து இருக்கிறது.

ஆனால், போரில் தனியாக வெல்லுமா என்று நம்பிக்கையுடன் கூறமுடியாது. வடகொரியாவைச் சேர்ந்த வீரர்கள் உக்ரைனுக்கு முன்னால் உள்ளனர். உக்ரைனின் ஆதரவாளர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் போர் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும்.

உக்ரைனில் போரை நிறுத்துவது கூட தற்போது சாத்தியமான ஒன்று தான். ஆனால் சில காரணங்களால், எங்கள் ஆதரவாளர்கள் இதைப் புரிந்து கொள்ள விரும்பவில்லை. உக்ரைனுக்கு ஏற்கனவே பல எதிரிகள் உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்”, என வலேரி ஜலுஷ்னி பேசியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here