எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 334.3 பில்லியன் டொலராக உயர்ந்ததை அடுத்து, உலகிலேயே இதுவரை இல்லாத சொத்து மதிப்பைக் கொண்ட பெரும் பணக்காரர் என்ற புகழை அவர் பெற்றுக்கொண்டார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்புக்கு எலான் மஸ்க் ஆதரவு அளித்ததுடன், தேர்தலில் போட்டியிட நிதியுதவியும் வழங்கியிருந்தார்.
இந்நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப் வெற்றி பெற்ற பிறகு எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சடுதியாக உயர்ந்துள்ளது. அமெரிக்க தேர்தல் முடிவு நாளில் மட்டும் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு பலமடங்கு அதிகரித்தது.
இதற்கு டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளில் ஏற்பட்ட எழுச்சியே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு, ஒட்டுமொத்தமாக 40 சதவீதம் சொத்து மதிப்பு உயர்ந்த நிலையில், எலான் மஸ்கின் மொத்த சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் 29 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதன்மூலம், உலகிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு சொத்து மதிப்பைப் பெற்றவர் என்ற பெருமையை எலான் மஸ்க் பெற்றுள்ளார்.
எலான் மஸ்கின் நண்பரும், ஆரக்கிள் நிறுவனத்தின் தலைவருமான லேரி எலிசன் 19 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் உலகப் பணக்காரர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.