இந்தியப் பயணத்தின் பின்னர்: சீனா செல்லும் ஜனாதிபதி அநுர

0
40
Article Top Ad

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சீனாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளுமாறு இலங்கைக்கான சீன தூதுவரால் உத்தியோகப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் மூன்றாம் வாரத்தில் ஜனாதிபதி இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

என்றாலும், இந்த பயணத்தை மேற்கொள்ளும் திகதிகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

விரைவில் இதுதொடர்பிலான தகவல்களை அரசாங்கம் வெளியிடும் என்றும், இந்தப் பயணத்தை தொடர்பில் ஜனாதிபதி சீனா செல்வார் என்றும் அவர் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் கூறியுள்ளார்.