டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: முட்டி மோதும் நான்கு அணிகள்

0
1
Article Top Ad

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 2023ஆம் ஆண்டு தொடக்கம் 2025ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற நான்கு அணிகளுக்கு இடையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போரவையின் மூன்றாவது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் 2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்கான இறுதிப் போட்டியில் பங்கேற்கும் இரு அணிகளை தேர்வு செய்ய இன்னும் 16 போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற 4 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

அதற்கமைய இருமுறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற இந்திய அணி, நடப்பு சம்பியனான அவுஸ்திரேலிய அணி, தென் ஆப்ரிக்கா அணி மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேற கடும் போட்டியிடுகின்றன.

அதற்கேற்ப உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் உள்ள அணிகளில் முதலிடத்திலுள்ள இந்தியா, இரண்டாம் இடத்திலுள்ள தென் ஆப்பிரிக்கா, மூன்றாம் இடத்தில் உள்ள அவுஸ்திரேலியா, நான்காம் இடத்திலுள்ள நியூசிலாந்து மற்றும் ஐந்தாம் இடத்திலுள்ள இலங்கை ஆகிய அங்கம் வகிக்கின்றன.

இருப்பினும் இதில் நான்காம் நிலையில் நியூசிலாந்து அணி உள்ள போதிலும் அவ்வணிக்கு இதன் பின்னர் டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகள் இல்லாததால் அந்த அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாக முடியாது.

அதனால் ஐந்தாம் நிலையிலுள்ள இலங்கை அணிக்கு இன்னும் மூன்றுப் போட்டிகள் உள்ளமையால் இறுதிப்போட்டியில் விளையாட வாய்ப்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய இந்திய அணிக்கு அவுஸ்திரேலிய அணியுடன் இன்னும் நான்கு போட்டிகள் மீதமுள்ளது. இதில் இரண்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றால் இந்தியா மூன்றாவது முறையாகவும் டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை உறுதி செய்யும்.

மேலும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு இலங்கை அணியுடன் ஒரு போட்டியும், பாகிஸ்தான் அணியுடன் இரு போட்டிகளும் மீதமிருக்க அதில் இரண்டுப் போட்டியில் வெற்றி பெற்றால் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தென்னாபிரிக்க அணி தெரிவாகும்.

மேலும் நடப்புச் சம்பியனான அவுஸ்திரேலியா அணிக்கு இந்திய அணியுடன் நான்கு போட்டிகளும் , இலங்கை அணியுடன் இரு போட்டிகளுமாக மொத்தம் ஆறுக் போட்டிகள் இருக்க இதில் நான்குப் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.

அதேபோல் இலங்கை அணிக்கு தென்னாபிரிக்க அணியுடன் ஒரு போட்டியும், அவுஸ்திரேலிய அணியுடன் இரு போட்டிகளுமாக மொத்தம் மூன்றுப் போட்டிகள் இருக்க அம்மூன்று போட்டிகளிலும் இலங்கை வெற்றி பெற்றால் மாத்திரமே இறுதிப் போட்டிக்குத் தெரிவாக முடியும் என்ற இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here