முன்னாள் ஜனாதிபதிகளை பாதுகாக்க 1,448 மில்லியன் ரூபா செலவு – அரசாங்கம் எடுக்கப்போகும் தீர்மானம்

0
5
Article Top Ad

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (17) பாராளுமன்றத்தில் உண்மைகளை வெளிப்படுத்தினார்.

அங்கு உரையாற்றிய அவர், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக அரசாங்கத்தினால் பொதுமக்களின் பணம் செலவிடப்படுவதாகவும், அந்த தொகை 1448 மில்லியன் ரூபா எனவும் தெரிவித்தார்.

இன்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் 60 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 228 ஆயுதப் படை வீரர்களும் பாதுகாப்பு மற்றும் ஏனைய தேவைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 4 இராணுவ அதிகாரிகளும் 60 பொலிஸ் அதிகாரிகளும் மெய்ப்பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 188 ஆயுதப் படை வீரர்களும், 22 பொலிஸாரும் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு 57 பொலிஸாரும் மற்றும் 60 இராணுவ வீரர்களும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு 60 பொலிஸ் உத்தியோகத்தர்களும், திருமதி ஹேமா பிரேமதாசவிற்கு 10 பொலிஸ் உத்தியோகத்தர்களும் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

இதன்போது, ​​அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த பதினொன்றரை மாதங்களில் அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக 1448 மில்லியன் ரூபாவை செலவிட்டது தொடர்பான உண்மைகளை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 3 நிறுவனங்களின் ஊடாக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒன்று ஆயுதப்படை, பொலிஸ் மற்றும் ஜனாதிபதி அலுவலகம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடந்த பதினொன்றரை மாதங்களில் ஆயுதப்படைக்கு மட்டும் 328 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து 55 மில்லியனும் செலவிடப்பட்டுள்ளது. அதன்படி 11 மாதங்களில் 710 மில்லியன் ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆயுதப் படைக்காக 6 மில்லியன், பொலிஸில் இருந்து 185 மில்லியன் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தில் 16 மில்லியன் என மொத்தமாக 207 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆயுதப்படைக்காக 258 மில்லியன் ரூபாவும், பொலிஸாருக் 39 மில்லியன் ரூபாவும், ஜனாதிபதி அலுவலகம் சார்பில் 10 மில்லியன் ரூபா என மொத்தம் 307 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்காக முப்படையினருக்கு 19 மில்லியன் ரூபாவும், பொலிஸாருக்கு 60 மில்லியன் ரூபாவும், ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து 3 மில்லியன் ரூபாவும் கடந்த மூன்று மாதங்களுக்கு 82 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

சந்திரிக்காவின் பாதுகாப்புக்காக பொலிஸாருக்கு 99 மில்லியன், ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து 12 மில்லியன் என மொத்த செலவு 112 மில்லியன் ரூபாவாகும்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவிக்கான 33 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, இந்த பதினொன்றரை மாதங்களுக்குள் மக்களின் பணமான 1448 மில்லியன் ரூபாவை அரசாங்கம் இந்த ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் செலவுகளுக்காக செலவிட்டுள்ளது. இது மிகவும் கடினமான சூழ்நிலை. என்றும் அவர் கூறினார். விரைவில் இவர்களது மேலதிக பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் அனைவரும் மீள பெறப்பட உள்ளனர் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here