சாதாரணத் தரத்தில் அனைத்து பாடங்களிலும் சஜித் “பெயில்“ – சர்ச்சைகளுக்கு முற்றுபுள்ளி வைத்தார்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கல்வித் தகைமை தொடர்பில் ஆளுங்கட்சி கொறடாவும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ சபையில் கேள்வியெழுப்பியிருந்த பின்னணியில் தமது கல்வித் தகைமை தொடர்பான சான்றிதழ்களை சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.
அரசியல் மேடைகளிலும் சமூக ஊடகங்களிலும் சஜித் பிரேமதாசவின் கல்வித் தகைமை பல்வேறு கேள்விகள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வந்தன.
இந்த நிலையில், சஜித் பிரேமதாசவின் கல்வித் தகமை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் நிலவுவதால் லண்டனில் அவர் பெற்ற கல்வித் தகமைகளை வெளிப்படுத்தினால் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளியை வைக்க முடியும் என ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும் சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ உட்பட ஆளுங்கட்சியின் சில உறுப்பினர்கள் நேற்று நாடாளுமன்றில் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்று புதன்கிழமை தமது கல்வித் தகைமைகள் தொடர்பிலான சான்றிதழ்களை சஜித் பிரேமதாச சபையிர் முன்வைத்தார்.
தான் சமர்ப்பித்த ஆவணங்கள் அனைத்தும் உண்மை. அதில் தவறு இருக்குமாயின் அதுகுறித்து எவரும் கண்டறிந்து நிரூபித்தால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலும் இருந்தும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் ஏன்? அரசியலில் இருந்தும் விலகத் தயார் என சஜித் பிரேமதாச கூறினார்.
நான், எனது பிறப்புச்சான்றிதழையும் எடுத்துவந்துள்ளேன். எவராவது கேள்வி கேட்பார்கள் என்று நினைத்துதான் அதனையும் எடுத்துவந்தேன் என்றும் சஜித் பிரேமதாச கூறினார்.
தனது கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறு தொடர்பாக தவறான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. நான் படித்த காலகட்டத்தில் F சித்திதான் இருந்தது. மாறாக நான் அனைத்து பாடங்களில் W சித்தி வாங்கியுள்ளதாக தகவல்கள் பகிரப்பட்டும் வருவதை அவதானித்தேன்.
என்னுடைய கல்வி தகைமையில் சந்தேகம் இருந்தால் பிரதமரிடம் கேளுங்கள். நான் அவரிடமும் கல்வி பயின்றுள்ளேன் என்றார்.
லண்டனில் பட்டப்படிப்பை நிறைவுசெய்ததற்கான சான்றிதழ்களையும் அமெரிக்கா மற்றும் இலங்கையில் அவர் பெற்ற கல்வி தொடர்பிலான தகவல்களையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
தனது வீட்டின் சுவரில் மாட்டியிருந்த சான்றிதழையும் நாடாளுமன்றத்திற்கு எடுத்து வந்து சஜித் பிரேமதாச காண்பித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.