மீண்டும் ஐரோப்பிய ஒன்றியம் பக்கம் சாயும் பிரித்தானியா?

0
4
Article Top Ad

பிரித்தானியாவில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள சர் கெய்ர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) தலைமையிலான லேபர் அரசு, மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயலாற்ற விரும்புவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் , மக்கள் வாக்களித்து பிரெக்சிட்டை நிறைவேற்றிய நிலையில், மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயலாற்றுவதற்கு பிரித்தானியாவில் எதிர்ப்பும் உருவாகியுள்ளது.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய நிகழ்வு, பிரெக்சிட் என அழைக்கப்படுகிறது. British – exit என்பதன் சுருக்கமே, Brexit என அழைக்கப்படுகிறது.

இந்நிலையில் மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயலாற்றுவது தொடர்பாக பிரதமர் ஸ்டார்மர் கருத்துத் தெரிவிக்கையில் ” பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையவில்லை. பிரித்தானியாவுக்கு நன்மை ஏற்படும் வகையில், சிறந்த சேவைகளைப் பெறுவதற்காக, மக்களுக்கு பயனளிக்கும் ஒரு நல்ல ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்துகொள்ளவே நாம் விரும்புகிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐரோப்பிய ஒன்றியமோ, 30 வயதுக்குக் கீழுள்ள ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் மக்கள், பிரித்தானியாவில் தடையில்லாமல் வேலை செய்யவும், பயணிக்கவும், அதேபோல பிரித்தானியர்களும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு தடையில்லாமல் சென்றுவரவும் ஆவன செய்யவேண்டும் என வலியுறுத்திவருகிறது.

எனவே, மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகள், ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு ஏற்ப பிரித்தானியா நடக்கவேண்டிய நிலை உருவாகிவிடும் என பிரெக்சிட் ஆதரவாளர்கள் உட்பட ஒரு தரப்பினர் அஞ்சுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here