கோலி, ரோகித் விரைவில் ஓய்வு

0
5
Article Top Ad

சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுதாக இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிர்ச்சியூட்டும் வகையில் நேற்று அறிவித்திருந்தார்.

போர்டர் – கவாஸ்கர் தொடரின் நடுவில் ஓய்வு பெறுவதாக அறிவித்த தோனிக்குப் பின்னர் அஸ்வின் இவ்வாறானதொரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

அஸ்வினுக்குப் பிறகு, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்றவர்கள் விரைவில் ஓய்வை அறிவிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் முற்பகுதியில் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கோலி, ரோகித் மற்றும் ஜடேஜா போன்றவர்கள் அறிவித்திருந்தனர்.

ரோகித்தின் துடுப்பாட்டம் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது, ஏனெனில் அவர் தனது கடைசி 11 இன்னிங்ஸ்களில் சராசரியாக 11.69 என்ற ரீதியில் ஓட்டங்களை குவித்துள்ளார்.

அதேபோல், அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கோலி சிறப்பாக செயல்படவில்லை. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் மட்டும் சதம் அடித்திருந்தார்.

அவர் அண்மை காலமாக துடுப்பாட்டத்தில் கடும் தடுமாற்றத்தை எதிர்கொள்வதை காணமுடிகின்றது.

இந்நிலையிலேயே, கோலி மற்றும் ரோகித் இருவரும் அடுத்த மாத தொடக்கத்தில் சிட்னியில் தங்கள் கடைசி டெஸ்டில் விளையாட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கிரிக்பஸ் வலைத்தளத்தில் வெளியான செய்தியில், இந்திய அணி விரைவில் பாரிய ‘மாற்றத்திற்கு’ உட்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர், இந்திய அணிக்கு அடுத்த டெஸ்ட் தொடர் 2025 கோடையில் இங்கிலாந்தில் இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, “இந்திய அணி விரைவில் ஒரு மாற்றத்திற்கு உட்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல ஆண்டுகளாக, அவுஸ்திரேலிய சுற்றுப்பயணங்கள் கிரிக்கெட் வாழ்க்கையை ஒரு வேதனையான முடிவுக்குக் கொண்டுவந்ததற்காக ஒரு மோசமான பெயரைப் பெற்றுள்ளன,” என்று கிரிக்பஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

2008 ஆம் ஆண்டு பல மூத்த வீரர்கள் விரைவாக ஓய்வு பெற்றதைப் போலவே, விரைவில் இந்திய அணியின் மூத்த வீரர்கள் ஓய்வு பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டில், சவுரவ் கங்குலி, விவிஎஸ் லட்சுமணன், அனில் கும்ப்ளே மற்றும் வீரேந்தர் சேவாக் போன்ற மூத்த வீரர்கள் தோனி தலைமையேற்ற பின்னர் முன்கூட்டியே ஓய்வு பெற்றனர்.

ஆகையினால், கோலி, ரோகித் மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்றவர்கள் ஓய்வுபெறும் போது, இந்திய கிரிக்கெட் அணி பாரிய மாற்றத்திற்கு உட்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here