உக்ரெய்ன் உடனான போரில் சமரசம் செய்துக் கொள்ள தயார் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.
இதன்படி அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்புடன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உக்ரெய்ன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்தவொரு நிபந்தனையும் இல்லை என்றும் அவர் கூறியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
உக்ரெய்ன் மற்றும் ரஷ்ய போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உட்பட பலநாடுகள் முயற்சிக்கும் நிலையில் போர் தற்போது
வரை இடம்பெறுகிறது.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப் தேர்தல் பிரசாரத்தின்போதே தான் பதவியேற்ற அடுத்த 24 மணிநேரத்தில் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என நம்பிக்கை வெளியிட்டார்.
மேலும் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் உக்ரெய்ன் மற்றும் ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்ப்பதாவும்
ட்ரம்ப் தெரிவித்திருந்தார் இந்நிலையில் உக்ரெய்ன் உடனான போரில் சமரசம் செய்துக் கொள்ள தயார் என புடின்
அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.