ரொனால்டோவுடன் இணைந்து விளையாட ஆசை – கிலியன் எம்பாப்பே

0
2
Article Top Ad

உலகின் முன்னனி நட்சத்திர உதைப்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் இணைந்து விளையாட விரும்புவதாக பிரான்ஸ் தேசிய அணியின் இளம் நட்சத்திர வீரரான கிலியன் எம்பாப்பே தெரிவித்துள்ளார்.

சமகால் காலபந்து உலகில் புகழ்பெற்ற வீரராக கிலியன் எம்பாப்பே மாறியுள்ளார். தற்போது அவர் ரியல் மெட்ரிட் அணியில் இணைந்து விளையாடி வருகின்றார்.

முன்னதாக, பிரான்ஸின்பாரிஸ் செயிண்ட் ஜெர்மன் (பிஎஸ்ஜி) கழகத்தில் லியனோஸ் மெஸ்ஸியுடன் இணைந்து, எம்பாப்பே சில ஆண்டுகள் விளையாடியிருந்தார்.

பின்னர் மெஸ்ஸி அமெரிக்க கழகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டமையால் பிரான்ஸ் கழகத்திலிருந்து வெளியேறியிருந்தார்.

இந்நிலையில் மெஸ்ஸியுடன் இணைந்து விளையாடியதை தன்னால் மறக்கவே முடியாது என கூறியிருக்கின்றார் எம்பாப்பே. அதைப்போல உதைப்பந்தாட்ட உலகில் மேலும் ஒரு சிறந்த வீரரான பிரேஸிலின் நெய்மர் உடனும் இணைந்து விளையாடியிருக்கிறார்.

ஆனால் உலகின் பல பில்லியன் ரசிகர்களைக் கொண்ட போர்த்துக்கல் அணியின் தலைவரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் மட்டும் எம்பாப்பே இதுவரையில் இணைந்து விளையாடியதே இல்லை.

அவருடன் தான் இணைந்து விளையாட வேண்டும் என்ற தனது ஆசையை சமீபத்தில் எம்பாப்பே வெளிப்படுத்தியுள்ளார்.

இருப்பினும் ரொனால்டோ தற்போது வுதி அரேபியாவின் அல் நசர் கழகத்தில் ஒப்பந்தமாகி விளையாடி வருவதனால் எம்பாப்பேவின் ஆசை கனவாகவே ஆகலாம் எனலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here