தனது எல்லைக்குள் எட்டு சீன இராணுவ விமானங்கள் மற்றும் ஐந்து கடற்படைக் கப்பல்கள் நுழைந்துள்ளதாக தைவான் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் (MND) இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை (உள்ளூர் நேரம்) தைவானைச் சுற்றி விமானம் மற்றும் கப்பல்கள் இயங்குவது கண்டறியப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளனர்.
எட்டு விமானங்களில், ஆறு விமானங்கள் இடைநிலைக் கோட்டைக் கடந்து தைவானின் வடக்கு மற்றும் தென்மேற்கு வான் பாதுகாப்பு மண்டலத்தில் (ADIZ) நுழைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தைவானைச் சுற்றி இயங்கும் எட்டு விமானங்களும், ஐந்து கப்பல்களும் இன்று காலை 6 மணி வரை (UTC+8) கண்டறியப்பட்டதாக” தைவான் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், நிலைமையைக் கண்காணித்து அதற்கேற்ப பதிலளித்துள்ளோம்.” எனவும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தைவானுக்கு ஆயுத விற்பனை மற்றும் உதவி பற்றிய வெள்ளை மாளிகை அறிவிப்பைத் தொடர்ந்து, அமெரிக்கா “நெருப்புடன் விளையாடுகிறது” என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், கடந்த ஞாயிற்றுக்கிழமை தைவானுக்கான அமெரிக்க ஆயுதப் பொதியைக் கண்டித்திருந்தார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை “சீனா கொள்கையை தீவிரமாக மீறுகிறது எனவும், சீனாவின் இறையாண்மையை கடுமையாக மீறுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.