பின்லாந்தில் -20 டிகிரி செல்சியஸ் நீரில் குளித்த ரொனால்டோ

0
4
Article Top Ad

கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட ரொனால்டோ குடும்பத்துடன் பின்லாந்து சென்றுள்ளார். அங்கு -20 டிகிரி செல்சியஸில் மேலாடையின்றி குளித்த விடியோ வைரலாகி வருகிறது.

ரியல் மாட்ரிட்டின் முன்னாள் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது அல் நசீர் அணிக்காக விளையாடி வருகிறார்.

அண்மையில் 900 கோல்களை கடந்து சாதனை படைத்தார். 39 வயதாகும் ரொனால்டோ தனது இன்ஸ்டா பக்கத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு 10 நிமிட விடியோவை வெளியிட்டுள்ளார்.

ரொனால்டோ இன்ஸ்டாவில் 645 மில்லியன் ஃபாலோயர்களை பெற்றுள்ளார். அதில் அனைவருக்கும் மெரி கிறிஸ்துமஸ் என ஸ்பானிஷ் மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த விடியோவில் வெளியே இருக்கும் நீரில் ரொனால்டோ இறங்கி குளித்தார்.

ஜனவரி வரை சௌதி அரேபிய லீக்கில் இருந்து ஓய்வில் இருக்கிறார் ரொனால்டோ.

பின்லாந்தில் எடுத்த குடும்பத்தினருடனான அழகிய தருணங்களை தனது யூடியூப் பக்கத்தில் கூடுதல் நிமிடங்களுடன் விடியோவாக பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here