ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தல் திகதியையும் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதியன்று தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பிரச்சினைகளை சமாளிக்கும் திறன் கொண்ட ஒரு நிலையான அரசாங்கத்தை அமைப்பதற்கான ஒரே வழி இதுதான் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜேர்மனியில் அரசியல் கட்சிகளிடையே தற்போதைய நாடாளுமன்றத்தில் புதிய அரசாங்கத்திற்கான பெரும்பான்மையில் உடன்பாடில்லை என்பது கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் தெளிவாகத் தெரிந்ததன் காரணமாக இந்த முடிவை எடுத்ததாக ஸ்டெய்ன்மியர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
கடினமான காலங்களில் துல்லியமாக ஸ்திரத்தன்மைக்கு நடவடிக்கை எடுக்கக்கூடிய அரசாங்கம் மற்றும் நாடாளுமன்றத்தில் நம்பகமான பெரும்பான்மை தேவைப்படுகிறது.
எனவே நமது நாட்டின் நலனுக்காக புதிய தேர்தல்கள் சரியான வழி என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என கூறியுள்ளார்.