பெற்றோர் மற்றும் பாட்டி-தாத்தா நிரந்தர வதிவிட Sponsorship விண்ணப்பங்களை இடைநிறுத்துவதாக கனடா அறிவிப்பு

0
51
Article Top Ad

பெற்றோர் மற்றும் பாட்டி-தாத்தாவை கனடாவில் நிரந்தர வதிவிடத்திற்காக அனுசரணை வழங்கும் Permanent residency sponsorship செய்வதற்கான புதிய விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதை கனடா இடைநிறுத்தியுள்ளது.

2024ம் ஆண்டில் பெற்றோர் மற்றும் பாட்டன்- பாட்டிமாரின் நிரந்தர வதிவிட உரிமைக்காக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 15,000 விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனேடிய குடிவரவுத்துறை அமைச்சர் மார்க் மில்லரின் தீர்மானத்தின் படி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக https://nationalpost.com/சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த முடிவின் மூலம், 2023-இல் வந்த விண்ணப்பங்களை முதலாவது முடிக்க கவனம் செலுத்தப்படும். இது கனடாவின் குடும்ப ஒன்றிணைப்புக்கான (Family Reunification) முக்கிய குறிக்கோளை சாதிக்க உதவும் என்று அமைச்சர் கூறினார்.

2024-ல் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கணக்கின் படி, 2023 முடிவில் 40,000-க்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இதேசமயம், ஒரு விண்ணப்பத்தை செயல்படுத்த சராசரியாக 24 மாதங்கள் ஆகும் என்று அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த முடிவு, கனடாவின் மொத்த குடியேற்ற எண்ணிக்கையை குறைக்க தீர்மானித்த புதிய திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here