புதிய அரசியலமைப்பு – அரசாங்கம் பணிகளை ஆரம்பிக்கவில்லை ; தமிழ் பகுதிகளில் ஆழமான கலந்துரையாடல்

0
12
Article Top Ad

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி புதிய அரசியலமைப்பொன்றை கொண்டுவரும் என தேர்தலுக்கு முன்னர் மக்களுக்கு வாக்குறுதியை அளித்திருந்தது.

புதிய அரசியலமைப்பு, மாகாண சபை முறை தொடர்பில் ஜே.வி.பியின் சில உறுப்பினர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளிப்படுத்திய பின்புலத்திலேயே புதிய அரசியலமைப்புக்கான செயல்பாடுகள் குறித்து அரசாங்கம் ஆலோசனைகளை நடத்த ஆரம்பித்துள்ளது.

என்றாலும், அரசாங்கத்தின் ஆயுட்காலம் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்தப் பின்னரே புதிய அரசமைப்பை நிறைவேற்றும் நோக்கம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உட்பட அக்கட்சியின் ஏனைய பிரதிநிதிகளுக்கு உள்ளது.

அரசாங்கம் புதிய அரசியலமைப்புத் தொடர்பிலான கருத்தாடல்களை இன்னமும் முறையாக ஆரம்பிக்காத சூழலில் வடக்கு, கிழக்கில் இதுதொடர்பிலான கருத்தாடல்கள் ஆழமாக ஆரம்பமாகியுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,

”தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றினால் மாத்திரமே புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான பூரண ஆதரவை வழங்க முடியும்.

அதிகாரப் பகிர்வு மற்றும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்தல் என்பன புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்பட வேண்டும்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையிலான தற்போதைய அரசாங்கம் புதிய அரசியலமைப்பை தயாரிப்பதாக உறுதியளித்துள்ள நிலையில் அதற்கான பணிகள் விரைவில் ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளன.

புதிய அரசியலமைப்பு தயாரிப்பதை தற்போதைய அரசாங்கம் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான கலந்துரையாடல் கூட்டங்கள் அதிகளவானவற்றில் அப்போதைய மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களும் கலந்துக்கொண்டர்.  பொதுத் தேர்தலின் பின்னர் மூன்று சந்தர்ப்பங்களில் தான் ஜனாதிபதியை சந்தித்து புதிய அரசியலமைப்பு தொடர்பில் கலந்துரையாடினேன்.

எவ்வாறாயினும்,புதிய அரசியலமைப்பு தொடர்பான தனது கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அதற்கான பணிகளை ஆரம்பித்ததன் பின்னரே அறிவிக்க முடியும்.” என்றார்.

இதேபோன்று கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் நாட்டில் தமிழ் மக்களுக்கும் சமமாக இருக்க வேண்டும்.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here