சீனாவில் தற்போது மிகவும் வேகமாக பரவி வரும் மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) தொற்றுக்கு இலக்கான மூவர் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் (ICMR) படி, பெங்களூருவில் எட்டு மாத மற்றும் மூன்று மாத குழந்தை என இரண்டு குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
குஜராத்தில் மூன்றாவது நோயாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதன்போது இரண்டு மாத குழந்தைக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பெங்களூருவில் உள்ள மூன்று மாத குழந்தை சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவரங்களின்படி, குழந்தைகளில் ஒருவர் திருப்பதிக்கு பயணம் செய்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், மூன்று குழந்தைகளும் சர்வதேச பயணங்களை மேற்கொள்ளவில்லை என கண்டறியப்படவில்லை.
வழக்கமான கண்காணிப்பு மூலம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தினால் இந்த நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
எட்டு மாத குழந்தைக்கு நோய் தொற்று இருப்பது கர்நாடக சுகாதாரத் துறையால் உறுதிப்படுத்தப்பட்டது